states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்தியாவில் 149 நாட்  களில் இல்லாத அள விற்கு தினசரி கொரோனா பாதிப்பு  1500-யை தாண்டி யுள்ளது. சனியன்று புதி தாக 1,590 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறும் நோயா ளிகளின் மொத்த எண்  ணிக்கை 8,601 ஆக  உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் அதி கரிப்புக்கான சூழல் உரு வாகியுள்ள நிலையில்,  கொரோனா பரிசோதனை அதிகரிக்க மாநிலங்க ளுக்கு ஒன்றிய அரசு உத்த ரவிட்டுள்ளது. மேலும்  ஏப்ரல் 10, 11 ஆகிய தேதி களில் நாடு முழுவதும்  கொரோனா பாதுகாப்பு  ஒத்திகை நடத்தவுள்ள தாக ஒன்றியஅரசு அறி வித்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த சூரிய புயல் வெள்ளியன்று பூமியை தாக்கியது. இந்த சூரிய புயலால் ஏற்பட்ட  பாதிப்பு மற்றும் ரேடியோ சிக்னல், ஜிபிஎஸ் சேவை பாதிப்பு பற்றி எவ்வித தக வலும் வெளியாக வில்லை. ஆனால் விண்  வெளிப் பயண நிறுவன மான “ராக்கெட் லேப்”  நிறுவனத்தின் எலக்ட்ரான் ராக்கெட் ஏவுதலை சூரியப் புயல்  90 நிமிடங்கள் தாமதப் படுத்தியுள்ளது என அமெரிக்க பெருங்கடல், வளிமண்டல நிர்வாகம் (NOAA) தகவல் தெரி வித்துள்ளது.

உலகச் செய்திகள்

பிரான்சில் உள்ள நெருக்கடி காரணமாக இங்கிலாந்தின் மன்னர் சார்லஸ் பயணம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இது பற்றிய மன்னர் அரண்மனையின் செய்திக் குறிப்பில், “அரசர் மற்றும் அரசி யின் அரசுப் பயணம் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. விரைவிலேயே இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கான புதிய தேதிகளை இருவ ரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது. நாட்டில்  புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராகப் பெரும் போராட் டங்கள் நடப்பதால் பயணத்தைத் தள்ளிப் போடுமாறு ஜனாதிபதி மக்ரோன் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளுக்காக அதன் தலைமை யகத்திற்கு வரும் ரஷ்ய அதிகாரிகளின் பயணங்களுக்கு அமெ ரிக்கா கட்டுப்பாடுகள் விதிக்கிறது என்று ரஷ்யா குற்றம் சாட்டி யுள்ளது. அவர்களுக்கான விசா வேண்டுமென்றே தாமதமாகிறது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை கூறியுள்ள ரஷ்யா, ஐ.நா. தலைமையகத்தை வைத்திருக்கும் அமெரிக்கா, தனது சர்வதேசக் கடமைகளை ஆற்றுவதில் இருந்து விலகிச் செல்கிறது. பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று ஐ.நா.சபைக்கான ரஷ்யக்குழு தெரிவித்தி ருக்கிறது.

ஈக்குவடாரின் ஜனாதிபதி கில்லர்மோ லஸ்ஸோவின் மீது நம்பிக் ்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான முன்மொழி விற்கு ஒப்புதல் தெரிவித்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தி ற்கு நாடாளுமன்ற நிர்வாகக் கவுன்சில் அனுப்பி வைத்துள்ளது. இந்தக் கவுன்சிலில் உள்ள ஏழு உறுப்பினர்களில் ஐந்து பேர் இதற்கு ஆதரவு அளித்தனர். தேசிய அவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர, மொத்தமுள்ள ஒன்பது அரசியல் சட்ட நீதிமன்ற நீதிபதிகளில், குறைந்தபட்சம் ஆறு பேர் ஒப்புதல் தர வேண்டும்.

முஸ்லிம்களுக்கான  4% இடஒதுக்கீட்டை ரத்து செய்த பாஜக!

கர்நாடக மக்கள் தொகையில், 2011 கணக்கெ டுப்பின்படி, முஸ்லிம்கள் 13 சதவிகிதமாக உள்ள நிலையில், அவர்களுக்கு கர்நாடக அரசு 2பி பிரிவின்  கீழ் 4 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி வந்தது. தற் போது இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. அவர்களை உயர்சாதி ஏழைகளுக்கான (EWS) இட ஒதுக்கீட்டு பிரிவில் சேர்க்கப்போவதாக கூறியுள்ளது. சிபிஐ முன் தேஜஸ்வி ஆஜர் ஒன்றிய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தபோது, ரயில்வே வேலை வழங்குவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக சிபிஐ தொடர்ந் துள்ள வழக்கில், லாலு பிரசாத் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி, அவரது சகோதரி மிசா பாரதி ஆகியோர் தில்லியில் உள்ள சிபிஐ அலு வலகத்தில் சனிக்கிழமையன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகினர்.

கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, மார்ச் 25- தமிழ்நாட்டில் லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதி களின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்கு களில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவு கிறது. இதன் காரணமாக, ஞாயிறன்று (மார்ச் 26) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.  மார்ச் 27, 28, 29 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திரு வண்ணாமலை, திருப் பத்தூர், வேலூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், ராணிப் பேட்டை, கரூர், திருச்சி மற்றும் தென்காசி மாவட்ட ங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.

நெல், கரும்புக்கு உரிய விலை வழங்கப்படும்: அமைச்சர்  தகவல்

சென்னை, மார்ச் 25- தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவா தத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக உறுப்பினர்கே.பி.முனு சாமி நெல், கரும்பு விலைகள் குறித்து தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதி மற்றும் கிராமப் புற வேலை உறுதித்திட்டம் பற்றி யும் சில வினாக்களை எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட வேளாண் மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,“கரும்பு விவ சாயிகளுக்கு நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகள் வழங்கியதால், கரும்பு பயிரி டும் பரப்பளவு 95 ஆயிரம்ஏக்கரி லிருந்து 1 லட்சத்து 55 ஆயிரம் ஏக்கராக அதிகரித்துள்ளது” என்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,“ கிராமப்புற வேலை உறுதி திட்டம் ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது சிறப்பாக செயல் பட்டது. பாஜக ஆட்சியில் நிதியை மட்டுமின்றி வேலை நாட்களை வெகுவாக குறைத்து விட்டது. ஆனாலும், தமிழ்நாடு அரசு 218 ரூபாய் கூலி வழங்குகிறது. மனித வேலை நாட்களையும் கணிசமாக உயர்த்தியிருக்கிறது. வரும் ஆண்டுகளில் அனைத்து கிராமங்க ளிலும் மனித வேலை நாட்களை அதிகப்படுத்துவோம்”என்றார்.

கியூபா : புதிய எம்.பிக்கள் தேர்வு

ஹவானா, மார்ச் 25- கியூபா தேசிய அவைக்குப் புதிய 470 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு மார்ச் 26 ஆம் தேதி நடக்கிறது.  நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான கருத்துக் கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துள்ளன. பல்வேறு நடைமுறைகள் கையாளப்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் 50 விழுக்காடு வேட்பாளர்களைப் பரிந்துரைக்கிறார்கள். தேசிய தொழிலாளர்கள் கூட்டமைப்பு, கியூபப் பெண்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் அமைப்புகள் எஞ்சிய வேட்பாளர்களைத் தேர்வு செய்கின்றன. பரிந்துரை செய்யப்படும் அனைத்து வேட்பாளர்களும் தேசிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். தொகுதிகளில் பரிந்துரை செய்யப்படும் வேட்பாளர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளூர் மக்கள் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த ஆணையம் கண்காணிக்கிறது. பரிந்துரை செய்யப்படுபவர்கள் கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. தேர்வு செய்யப்படும் தேசிய அவை உறுப்பினர்கள் ஐந்து ஆண்டு காலத்திற்குப் பதவியில் இருப்பார்கள். இந்த உறுப்பினர்களுக்கு எந்தவிதமான ஊதியம் தரப்படுவதில்லை. ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் பணியில் அவர்கள் தொடரலாம். இந்தத் தேர்தல் வெளிப்படையாகவும், நேரடியாகவும் நடப்பதால் வெளிநாட்டு ஊடகங்களும் இந்தப் பணியை நேரில் பார்த்து செய்திகளை சேகரிக்க முடியும். ஆண்டுக்கு இருமுறை கூடும் தேசிய அவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் புதிய ஜனாதிபதி உள்ளிட்டோரை தேர்வு செய்யும்.


 

;