states

விஷவாயு தாக்கி உயிரிழப்புக்கு இழப்பீடு உயர்வு

சென்னை,அக்.5- பாதாளச் சாக்கடை அல்லது கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளின்போது, உயி ரிழந்த நபர்களின் வாரிசுதாரர் களை கண்டறிந்து அவர்களுக்கு  இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கப் பட்டுவருகிறது. இந்த தொகை இனிவரும் காலங்களில் ரூ.15 லட்சமாக வழங்கப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு 3 வருடங்க ளுக்கு ரூ.1.50 லட்சம் கூடுதலாக வழங்கவும் சென்னை  மாநகராட்சி முடிவு செய்து,  இதுதொடர்பாக மாமன்றத் தில் தீர்மானமும் நிறை வேற்றப்பட்டுள்ளது. அதேநேரம் இதற்கான வழிகாட்டு நெறி முறைகளையும் பெருநகர சென்னை மாநகராட்சி வெளி யிட்டுள்ளது.  இதன்படி, பாதாளச் சாக் கடை அல்லது செப்டிக் டேங்க் பணியால் பாதிக்கப்பட்ட வர் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் ஈடுபடுத்தப் பட்டவராக இருந்தால், உயிரி ழந்தவரின் சட்டப்பூர்வ வாரிசு களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டி (செப்டிக்  டேங்க்) பணியால் பாதிக்கப்பட்ட வர் தனியார் அல்லது ஒப்பந்த தாரரால் ஈடுபடுத்தப்பட்ட நபராக  இருந்தால், அந்த இழப்பீட்டுத்  தொகையானது உயிரிழந்தவ ரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு சம்பந்தப்பட்ட நபர் அல்லது ஒப்பந்ததாரர் அல்லது முதலாளி யால் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட தனியார் முதலாளிக்கு முழு இழப்பீட்டுத் தொகையையும் செலுத்தும் திறன் இல்லை என்றால், மீத முள்ள தொகையை சம்பந்தப் பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிதியிலிருந்து உயிரிழந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்குச் செலுத்த வேண்டும். பாதாளச் சாக்கடை அல்லது  செப்டிக் டேங்க் பணியால் பாதிக்கப்பட்டவர் உள்ளாட்சி  அமைப்புகளால் பணியமர்த்தப் பட்டவராக இருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் முதன்மை முதலாளிகள் இழப்பீட்டுத் தொகையை உயிரிழந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு தங்கள் சொந்த ஆதாரங்களில் இருந்து செலுத்த வேண்டும்.

;