இதோ பட்டியல் வகுப்பினருக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை: 2018 - 42793; 2019 - 45961; 2020 - 50291. 2021 இல் 1.2 சதவீதம் மேலும் அதிகரிப்பு. பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை: 2018 - 6528; 2019 - 7570: 2020 - 8272. 2021 இல் 6.4 சதவீதம் மேலும் அதிகரிப்பு. பட்டியல் வகுப்பினருக்கு எதிரான மொத்த குற்றங்களில் 25.8 சதவீதம் - தேசத்தில் கால்வாசி - எங்கே தெரியுமா? காவி முதல்வர் ஆதித்ய நாத் ஆளும் உத்தரப்பிரதேசம்தான். காவிக்கும் சாதிக்குமான தொடர்புக்கு இது சாட்சியம். அடுத்து ராஜஸ்தான் ( 14.7%), மத்தியப் பிரதேசம் (14.1). இந்த மூன்றும் சேர்ந்தால் தேசத்தின் பாதி குற்றங்களுக்கு உறைவிடங்கள் ஆகின்றன. பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலமும் பா.ஜ.க ஆள்வது தான். மத்தியப் பிரதேசம் 29.8%. இதிலும் கால்வாசியை ஒரு மாநிலமே வைத்துள்ளது. அடுத்து இராஜஸ்தான் 24%. இரண்டும் சேர்ந்தால் இந்தி யாவின் பாதிக் குற்றங்கள். கே.எஸ்.