சென்னை, மார்ச் 11- ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் துணை போவதாக இரா.முத்தரசன் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை திருப்பி அனுப்பிய ஆளு நரின் ஜனநாயக அத்துமீறலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் சென்னை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே சனிக் கிழமை (மார்ச் 11) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வட சென்னை மாவட்டச் செயலா ளர் த.கு.வேம்புலி வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன், மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இரா.முத்தரசன் கூறுகையில், “தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலி வாங்கிய ஆன் லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றிய மசோதாவை ஆளுநர் ரவி நிலுவையில் வைத்து, சூதாட்ட முத லாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆணவப்போக்குடன் அந்த மசோ தாவை திருப்பி அனுப்பியுள்ளார்” என்றார். ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர், பலர் கடனாளியாகியுள்ளனர். தமிழ் நாடு மக்களை பெரிதும் பாதிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை உடனடி யாக தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த நான்கு மாதங்களுக்குள் 12 பேர் இறந்துள்ளனர். தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்கொலையை தூண்டு வதும் சட்டப்படி குற்றமாகும். எனவே ஆளுநர் ரவி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மத்திய சென்னை மாவட்டச் செயலா ளர் பா.கருணாநிதி, தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முழக்கமிட்டனர்.