states

ராம்நாத் - மோடி திடீர் சந்திப்பு

புதுதில்லி, ஜூன் 20- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஐந்தா ண்டு பதவிக் காலம் ஜூலை  24-ஆம் தேதியுடன் முடிவடை வதால், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் அறிவிக்கப் பட்ட நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத்  கோவி ந்தை அவரது மாளிகையில் பிரதமர் நரேந்திரமோடி ஞாயிற்றுக் கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு நாற்பது நிமிடங்கள் நடந்தது. இது “வழக்கமானது”தான் என்றும், குடியரசுத்தலை வர் மற்றும் பிரதமர் இருவரும் “தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்கள்” குறித்து விவாதித்ததாகவும் தகவ லறிந்த வட்டாரங்கள் தெரி வித்தன. குறிப்பாக  அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு பெரும்பாலான எதிர்க்கட்சி கள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன. புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்றது போல், அக்னி பாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென வலி யுறுத்தி நாடு முழுவதும் ஐந்து நாட்களாக இளைஞர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இவர்களின் இந்தச் சந்திப்பு முக்கியத்து வம் பெறுகிறது என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.