states

இந்தோனேசியா கால்பந்து மைதானத்தில் பயங்கர மோதல்

ஜகார்த்தா, அக்.2- இந்தோனேசியாவில் நடை பெற்ற கால்பந்து போட்டியில் ரசி கர்களுக்கு இடையே நடந்த பயங்  கர மோதலால் உயிரிழந்தோர் எண் ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இந்தோனேசியாவின் கிழக்கு  ஜாவாவில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் அரேமா எஃப்சிக் கும், பெர்செபயா சுரபயாவுக்கும் இடை யிலான கால்பந்து போட்டி  நடை பெற்றது. இதில், அரேமா எஃப்சி  அணியை  3-2 என்ற கோல் கணக்கில்  தோற்கடித்து பெர்செபயா சுரபயா வெற்றி பெற்றது. இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத அரேமா எஃப்சி அணியின்  ரசிகர்கள், பார்வையாளர்கள் மேடை யில் இருந்து மைதானத்திற்குள் புகுந்  தனர். அவர்களுக்கு எதிராக சுரயாபா அணியினரும் மைதானத்திற்குள் புகுந்தனர். இதனால் இருதரப்பு ரசி கர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.  பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு களை வீசினர். எனினும் இருதரப்பு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக் கிக் கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கியதால் பலருக்கு மூச்சுத் திண றல் ஏற்பட்டது.  நூற்றுக்கணக்கானோர் ஒரே சம யத்தில் மோதிக் கொண்டதால், 50க்கும் மேற்பட்டோர் ஆடுகளத்தி லேயே மிதிபட்டு இறந்தனர். நூற்றுக்  கணக்கானோர் படுகாயத்துடன் ஆடு களத்தில் இருந்து தப்பி ஓடினர்.  அவர்கள் தற்போது மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், மோதலில் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது.

;