states

சிவகங்கை கல்லூரி மாணவி மர்ம மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுக!

சென்னை,ஜன.12- சிவகங்கை கல்லூரி மாணவி மர்ம மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் சேது பாஸ்கரா தனியார் வேளாண் கல்லூரி உள்ளது. அக்கல்லூரியில் பயின்ற திருநெல் வேலி மாவட்டம் வீரமாணிக்கபுரத்தை சார்ந்த  பிரீத்தா தேவி என்ற மாணவி ஜனவரி 7ஆம் தேதி காலை  9 மணிக்கு விடுதியின் பின்புறம் உயிருக்கு போராடிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி செய்துள்ளதாக அவளது பெற் றோருக்கு கல்லூரி நிர்வாகம் தகவல் கொடுத்து விட்டு,  காரைக்குடியில் உள்ள குளோபல் மருத்துவமனை யில் மாணவியை அனுமதித்திருந்தது. அங்கு முதல் உதவி அளித்த மருத்துவ மனை நிர்வாகம் கல்லல் காவல் நிலை யத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளது. அதுவரை கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு எந்த தகவ லும் தரவில்லை. முதல் உதவி முடிந்து மிக மோசமான நிலையில் இருந்த மாணவியை  கல்லூரி நிர்வாகம் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்தது. மதுரை மீனாட்சி மருத்துவமனை யில் தான் பெண்ணின் பெற்றோர்  சென்று பார்த்துள்ளனர்.அன்று இரவு சிகிச்சை பலனின்றி அந்த மாணவி மரணம் அடைந்தார். அன்று இரவு மாணவியின் உடல் உடற் கூராய்வுக்கு மதுரை அரச ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக காவல்துறை ஆய்வாளர் மாணவி இறக்கும் வரை கல்லூரி நிர்வாகத்திடம் எந்த புகாரும் காவல் துறை எழுத்துப்பூர்வமாக பெற வில்லை. அவர் இறந்த பின் அவரு டைய தந்தையிடம் புகார் மனுவை எழுதிக் கேட்டுள்ளனர். சம்பவம் நடந்தது குறித்து எந்த தகவலும் தனக்கு தெரியாது என்ப தால் புகார் மனுவை எழுதித்தர மாணவி யின் பெற்றோர் மறுத்துவிட்டனர். ஆனாலும் காவல்துறை ஒரு புகாரை எழுதி பெண்ணின் தந்தையிடம் கையொப்பம் பெற்றுள்ளது.அந்த விடு தியில் எங்கும் சிசிடிவி கேமராக்கள் இல்லை என சொல்லப்படுகிறது. மேலும் மொட்டை மாடிக்கு செல்வ தற்கான கதவின் சாவி காப்பாளரிடம் மட்டுமே உள்ளது. அந்த மாணவி சாவியை எடுத்து எப்படி திறந்து தற்கொலை செய்திருப்பார் என்பதே  கல்லூரி மாணவிகளிடம் எழும் கேள்வி. இவ் வழக்கில் சம்பவம் நடந்த கல்லூரி நிர்வாகத்திடம் காவல்துறை இதுவரை புகார் மனு பெறவில்லை.  கல்லூரி நிர்வாகத்திடம் புகாரை பெறாமல் மாணவியின் பெற்றோரை கட்டாயப்படுத்தி புகார் மனுவில் கையெழுத்து பெற்ற கல்லல் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.