துபாய், மே 4- தொழிலாளர்களின் உரி மைகளுக்கு முழு ஆதரவை அளிப்பதன் மூலம் தொழில் வணிகத்தை வலுப்படுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைமை திட்டமிட்டுள்ள தாக அந்நாட்டின் மனிதவள அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் அவார் தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினமான மே 1 அன்று துபாயில் உள்ள அல்நபுடா தொழிலாளர் விடுதிக்கு விஜயம் செய்த போது அமைச்சர் இவ்வாறு கூறி னார். அமீரகத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களு க்கும் நாடு செலுத்தும் மரி யாதையின் ஒரு பகுதியாக சர்வதேச தொழிலாளர் தினத் தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொண்டாடுகிறது. பல்வேறு பொருளாதார துறைகளில் அவர்களின் பங்களிப்பு களை யுஏஇ பாராட்டுகிறது. “நமது சாதனைகளின் துடிப்பு நமது தொழிலா ளர்கள்” என்பது மனிதவளங் கள் மற்றும் உள்நாட்டுமய மாக்கல் அமைச்சகத்தின் இந்த ஆண்டுக்கான கருப் பொருள் ஆகும். உலக ளாவிய போட்டித் தன்மை குறித்த அறிக்கைகளின் பட்டியலில் யுஏஇ முதலி டத்தில் உள்ளது. கோவிட் பெருந்தொற்று நோய்க்குப் பிறகு உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதா ரங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒன்றாகும். முத லாளிகள் மற்றும் தொழிலா ளர்களின் உரிமைகளையும் பொறுப்புகளையும் சீரான முறையில் பாதுகாக்கும் புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்படும் சூழலில் இந்த ஆண்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.