சென்னை,ஜூன் 18- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,765-க்கும், சவரனுக்கு ரூ,38,120-க்கும் விற்பனை யானது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ5,164-க்கும், சவரனுக்கு ரூ.41,312-க்கும் விற்பனை யானது ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளியன்று (ஜூன் 17) விலையி லிருந்து கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராம் ரூ.66.30 காசுகளுக்கும், கிலோ ரூ.66,300-க்கும் விற்பனையாகிறது. வெள்ளிக்கிழமை (ஜூன் 17) விலையிலிருந்து வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்துள்ளது.