states

‘2016’ கான்பூர் ரயில் விபத்து தொடர்பான என்ஐஏவின் விசாரணை அறிக்கை எங்கே?

புதுதில்லி, ஜூன் 6- ஒடிசா ரயில் விபத்து தொடர்  பாக ரயில்வே நிர்வாகம் சிபிஐ  விசாரணைக்கு பரிந்துரைத்தி ருப்பது, செய்தி பரபரப்பிற்காக வும், பிரச்சனையைத் தள்ளிப் போடுவதற்காகவும் மட்டுமே ஆகும் என்று காங்கிரஸ் கட்சி குற்  றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி யின், தகவல் தொடர்பு பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத் தில் கூறியிருப்பதாவது: “பாலசோர் ரயில் விபத்து குறித்து ரயில்வே-யின் பாதுகாப்பு ஆணையர் இன்னும் தனது அறிக்கையை சமர்ப்பிக்காத நிலையில், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது  தலைப்புச் செய்தி பரபரப்புக்காக வும், காலக்கெடுவை நீட்டிப்ப தற்காகவும் மட்டுமே இவ்வாறு செய்யப்படுகிறது. ஏனெனில், நவம்பர் 20, 2016:  இந்தூர் - பாட்னா விரைவு ரயில்  கான்பூரில் தடம்புரண்டு விபத் துக்கு உள்ளானது. இதில் சுமார் 150 பேர் உயிரிழந்தனர். ஜனவரி 23, 2017-இல் அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு,  இந்த விபத்து குறித்து தேசிய புல னாய்வு முகமை விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திற்கு கடி தம் எழுதினார். பிப்ரவரி 24, 2017-இல், ‘கான்பூர் ரயில் விபத்து ஒரு  சதிச்செயல்’ என்று பிரதமர் நரேந்  திர மோடி அறிக்கை வெளி யிட்டார். ஆனால், அக்டோபர் 21,  2018-இல் தேசிய புலனாய்வு முகமை (NIA) கான்பூர் ரயில்  விபத்து தொடர்பாக எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யாது என்று ஊடகங்கள் தெரி வித்தன. ஜூன் 6, 2023: இன்றுவரை கான்பூர் ரயில் விபத்து குறித்த தேசிய புலனாய்வு முகமை விசாரணையின் இறுதி அறிக்கை குறித்த எந்த அதிகாரப்பூர்வ தக வலும் வெளியாகவில்லை” என்று  ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். அதாவது, ‘2016 கான்பூர் ரயில் விபத்து ஒரு சதிச்செயல்’ என்று  கூறித்தான், அப்போது தேசிய புல னாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இன்று வரை அதன் முடிவு தெரிய வில்லை. அதேபோலத்தான் ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தி லும் தற்போது சிபிஐ விசார ணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ள தாக விமர்சித்துள்ளார்.

;