states

வேலுமணி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை,நவ.30- சென்னை, கோவை மாநகராட்சி களின் ஒப்பந்த பணிகளை வழங்கி யதில் மிகப்பெரிய முறைகேடு நடந்து ள்ளது என்றும் முன்னாள் உள்ளாட்சி த்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பெரும் ஊழல் செய்து ள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை யில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில், எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு தொடர் பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்எம்டி.டீக்கா ராமன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் ஆர்.சண்முக சுந்தரம், காவல்துறை தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புகார்தாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, சுரேஷ், எஸ்.பி.வேலு மணி தரப்பில் தில்லி மூத்த வழக்கறி ஞர்கள் எஸ்.வி.ராஜூ, சித்தார்த் தவே, வழக்கறிஞர் ஜெ.கருப்பையா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பி டாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். அந்தத் தீர்ப்பு, புதனன்று(நவ.30) பிற்பகல் வழங்கப்படும் என உயர்நீதி மன்ற பதிவுத்துறை அறிவித்தது. அதன்படி,  முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான சொத்து  குவிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம், அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது. நீதி பதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.