states

பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக க.அறிவொளி நியமனம்

சென்னை, ஜூன் 6- தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறைக்கு இயக்குநராக க.அறி வொளியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது . தொடக்க கல்வி இயக்க கத்தின் இயக்குநராக இருந்த முனைவர் அறிவொளி, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் இயக்கு நராக நியமனம் செய்யப்பட்டுள் ளார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கூடுதல் திட்ட இயக்குநராக இருந்த முனைவர் ராமேஸ்வர முருகன், ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் செயலாளராக நியமிக் கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் மற்றும்  கல்வியியல் பணிகள் கழகத் தின் உறுப்பினர் செயலராக இருந்த முனைவர் கண்ணப்பன்,  தொடக்க கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமனம் செய்யப் பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராக இருந்த முனைவர் பழனிச்சாமி, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குந ராக நியமனம் செய்யப்பட்டுள் ளார். பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக இருந்த குப்புசாமி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி யியல் பணிகள் கழகத்தின் உறுப்பி னர் செயலராக நியமிக்கப்பட்டுள் ளார்.