states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

அண்ணா பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வு முடிவு வெளியிடப் பட்டுள்ளது. 38% மாண வர்கள் மட்டுமே அனை த்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 62% மாணவர்கள் ஏதே னும் ஒரு பாடம் அல்லது பல பாடங்களில் தோல்வி என அண்ணா பல்கலைக்கழகம் தெரி வித்துள்ளது.

“லீனா மணிமேகலை யின் “காளி” பட போஸ்ட ரை திரிணாமூல் காங்கிரஸ் ஒருபோதும் ஆதரிக்காது. எங்கள் கட்சி அனைத்து மதங் களையும் மதிக்கிறது. லீனா மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரி வித்த மஹுவா மொய்த்ரா வின் அறிக்கையை நாங் கள் ஏற்கவில்லை. எப்ஐ ஆர்களை அவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என திரிணா முல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் கூறியுள் ளார். (செய்தி: 6)

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் செல்லும் இண்டி கோ விமானத்தில் திடீ ரென புகைவந்தது.  விமான போக்குவரத்து ஆணையரகம் விசார ணைக்கு உத்தரவிட்டு ள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு அடுத்தகட்ட கொரோனா தடுப்பூசிக்  கான கால இடைவெளி யை ஒன்றிய சுகாதார அமைச்சகம் குறைத்துள் ளது. தற்போது 2-ஆம் கட்ட டோஸ்களுக்கான கால இடைவெளி 9  மாதமாக உள்ள நிலை யில், 6 மாதமாக குறைக்க ப்பட்டுள்ளது.

நேபாள நிதியமைச்சர் ஜனார்த்தன் சர்மா தனது பதவியை திடீரென ராஜி னாமா செய்துள்ளார். நாடாளுமன்றக் கூட் டத்தில் உரையாற்றும் போதே திடீரென ராஜி னாமா அறிவிப்பை வெளி யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திற்கு கன மழையால் ஆரஞ்சு எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.  அங்கன்வாடி மையங் கள், பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளி த்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள் ளது. 

நபிகள் நாயகம் குறித்து தவறான கருத்து தெரி வித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா வுக்கு கொலை மிரட்டல் விடுத்த ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ஷெரீப் தர்காவைச் சேர்ந்த காதிம் சல்மான் சிஷ்டியை  காவல்துறையினர் கைது செய்தனர்

அரசியல் அமைப்பு சட்டம் குறித்து சர்ச்சைக் குரிய வகையில் பேசிய கேரள அமைச்சர் சஜி செரியன் பதவி விலகி னார். மீன்வளத்துறை அமைச்சராக இருந்த சஜி செரியன் புதனன்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

 

;