states

கோட்சே மாடல் - நவகவி

பார்லிமெண்டு வாசப்படிக்கு
முத்தம் தந்தார் வணக்கமா!
கோட்சே மாடல் கும்பிடுஅது
புரிஞ்சு போச்சு விவரமா! - இது
மோடியோட குசும்பும்மா!
ஜனநாயகம் எளப்பமா?
ஆகிப்போச்சு குழப்பமா!
ஆர் எஸ் எஸ் தடி சாயலில்
செங்கோல் பார் அபத்தமா!
                (பார்லிமெண்டு)

பேசுவாரு வாய் கிழிய டி வி யிலே!
பேசாமடந்தை ஆவார்மக்கள் அவையினிலே!
ஊமை இல்ல இவரு!
அப்படி நெனச்சா  தவறு!
சட்டத்தின்மேல் சம்மணம் போட்டு                  அமர்ந்திருப்பாரு!
சங்கி சட்டம் சொன்னபடி நடந்திடுவாரு!
கேள்வி கேட்டுப் பாரு
கெக்கே பிக்கேம் பாரு!
அம்பேத்கர் சட்டத்துக்கு ஆப்படிப்பாரு!
ஆர் எஸ் எஸ் திட்டத்துக்கு தலையசைப்பாரு!
                (பார்லிமெண்டு)

பஜனை மடம் ஆக்கிப்புட்டான் பார்லிமெண்ட!
உடன்கட்டைக்கு ஓ போடுது சங்கி மண்ட!
பளபளப்பு பெருசு!
பார்லிமெண்டு புதுசு!
ஆட்சி இதன் கொள்கை மட்டும் பாடாவதி பழசு!
விவாதத்துக்கு வேலை இல்ல மக்கள் சபை              பவுசு!
சாணக்கியன் சிலைக்கு
சலாம் போடும் தலைக்கு
வேப்பங்காயா கசக்குது நம் தேசத்தோட சட்டம்!
அர்த்தசாஸ்திரம் மனுஅநீதி அவங்களோட                இஷ்டம்!
                (பார்லிமெண்டு)

ஊராட்சியா மாநிலங்கள ஒடைச்சுவைக்க
ஆராய்ச்சிய பண்ணுறானே அடக்கி வைக்க!
அம்பானியின் சொத்தா
பொதுத்துறைய வித்தா
கல்லா கட்டலாம் லஞ்சப் பணம் ரொம்ப ரொம்ப 
    கெத்தா!
குல்லாபோடலாம் ஜனத்துக்குன்னு 
அலையுறானே பித்தா!
புதிய கல்வித் திட்டம்
குருகுலம் போல் மட்டம்!-அதை
விஸ்வகர்மா யோஜனா போல் குலக்கல்வியா                                       ஆக்குவான்!
சாமியார்கள் சபையாக மக்கள் சபைய              மாத்துவான்!
                (பார்லிமெண்டு)