தலச்சேரி, ஏப்.12- கண்ணூர் அருகே வெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகரின் உள்ளங்கைகள் நொறுங்கின. எரஞ்சோழிபாலம் அருகே ஸ்ருதி நிலையத்தில் வசிக்கும் விஷ்ணு (20) என்பவரின் உள்ளங்கை சிதறி யது. கை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் கோழிக்கோடு மரு த்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஷ்ணு தனது வீட்டின் அருகே உள்ள வயலில் செவ்வாயன்று (ஏப்.11) இரவு 12 மணியளவில் வெடி குண்டு தயாரித்து கொண்டிருந்தார். அப்போது இந்த வெடிப்புச் சம்பவம் நடைபெற்றுள்ளது.காயமடைந்த அவர் கண்ணூர் சாலா பேபி மெமோரியல் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் கோழிக்கோடுக்கு மாற்றப்பட்டார். எரஞ்சோழிபாலமும் அதன் சுற்றுப்புறமும் அமைதியான சூழல் நிலவும் பகுதிகளாகும். வெளியில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இரவு நேரத்தில் கச்சும்பிரத்தின் கீழ் முகாமிட்டுள்ளதாக முன்னரே தகவல் கிடைத்தது. சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த வெடிச் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விஷு பண்டிகை என்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. விஷுவை சாக்காக வைத்து வெடி குண்டு சோதனை நடப்பதாக அப்பகுதியில் தகவல்கள் பரவின. வெடிகுண்டு வீசப்பட்ட காட்சிகள் உள்ளூர் ஆர்எஸ்எஸ் வாட்ஸ்அப் குழுவில் இருந்து கசிந்தது. இந்த குண்டுவெடிப்பு மூலம் மாவட்டத் தில் ஆர்எஸ்எஸ் வன்முறைக்கு திட்டமிட்டுள்ளது என்பது வெளிச்சத் திற்கு வந்துள்ளது.