சென்னை, டிச.9- தமிழகத்தில் கூட்டுறவு பஞ்சாலை களில் ஒப்பந்த முறையில் வேலை பார்ப்பதற்கான கட்டாய நடவடிக்கை யை கைவிட வேண்டும் என்று சிஐடியு பஞ்சாலைத் தொழிலாளர் சம்மே ளனம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் இயங்குகின்ற கூட்டு றவு பஞ்சாலைகளின் அனைத்து ஆலை களின் சிஐடியு சங்க நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் ஆர். உமாநாத் தலைமையில் நடைபெற்றது. தமிழ் மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மே ளனத்தின் பொதுச் செயலாளர் எம்.அசோகன், மாநிலப் பொருளாளர் எஸ். சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆறு ஆலைகளையும் முழுமை யாக இயக்கியதற்கும், நிரந்தர தொழி லாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து ஆணை வெளியிடப்பட்டு அமலாக்கப்படும் என்று அறிவித்த முத லமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப் பட்டது. ஆலையை முழுமையாக இயக்குவதற்கு ஆள் பற்றாக் குறை உள்ளது. தொழிலாளர்கள் கூடுதல் பணிக்கு கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.
பயிற்சியாளர்கள் ஊதி யத்தை விட மிக குறைந்த ஊதியம் கொடுத்து வருகின்ற நிர்வாகங்கள், கூடுதல் பணிக்கு கட்டாயப்படுத்தப் படுகிற பொழுது மிகுந்த மன உளைச்ச லோடு தொழிலாளிகள் பணி புரியும் நிலை உள்ளது. ஒப்பந்த முறையை புகுத்துவதற்கு நிர்வாகங்கள் கட்டாய நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஒப்பந்த முறையில் வேலை பார்ப்ப தற்கான கட்டாய நடவடிக்கையை கைவிட வேண்டும். தினக்கூலி தொழி லாளர்கள் நிரந்தரம் செய்யப்படு வார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் .ஊதிய உயர்வு வழங்கி னால் தொழிலாளிகளின் வருகை குறை வதற்கும், உற்பத்தியை அதிகரிப்ப தற்கும் வாய்ப்பு உள்ளது என்ப தை அரசின் கவனத்திற்கும், நிர்வாகங் களின் கவனத்திற்கும் கொண்டு வருகிறோம். தரமான உற்பத்தி செய்வதற்கு அடிப்படை தரமான பஞ்சு வாங்கப்பட வேண்டும். அத்தகைய நிலை தற்போது நிர்வாகத்தில் இல்லை. தரமான பஞ்சு கலவையின் மூலமாக போடப்படுகிற பொழுது ஸ்பின்னிங் பிரிவில் வைக்கின்ற சரியான வேகத்திற்கு தர மான நூலை உற்பத்தி செய்ய முடி யும். ஸ்பின்னிங் பிரிவில் அரைகண்டு கள் - குறைக்கண்டுகள் ஏற்படாமல் முழு கண்டுகள் உற்பத்தி நடக்கின்ற பொழுது கோன்வைண்டிங் பிரிவிலும் சரியான அளவு உற்பத்தியை கொடுக்க முடியும். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல அடிப்படையில் தவறு ஏற்படுகிற பொழுது அனைத்து டிபார்ட்மெண்ட் ஊழியர்களும் சிரமப்படும் நிலை உள்ளது. அதை மாற்ற ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.