states

எவ்வளவு வேகத்தில் சென்றால் ரயில் தடம் புரளும்?

ஒரு சில ரயில் தண்டவாளங்கள் கனமானதாக இருக்கும். ஒரு சில தண்டவாளங்கள் கனம் குறைவான தாக இருக்கும். தண்டவாளங்களைப் பொறுத்து அதில் பயணிக்கும் ரயில்களின் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வேகத்தைவிட அதிகமான வேகத்தில் ரயில் பய ணிக்கும்போது தடம் புரள வாய்ப்பு ஏற்படுகிறது. வேகமாகப் பயணிக்கும் ரயில் செல்லும் பாதையில் எதிர்புறமாக வேறு ரயில் வந்து, பிரேக் போடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், பெட்டிகளின் எண்ணிக்கை அதிக மாக இருந்தால் ரயில் நிற்க கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளும். இதேபோல், அதிக எடை இருந்தாலும் நிற்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். எடுத்துக்காட்டாக, ஒரு ரயில் 120கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு சரக்கு ரயிலை நிறுத்துவதற்காக பிரேக் போடப்பட்டால், அதன் வேகம் 120கி.மீ என்ற நிலையி லிருந்து 0 கி.மீ என்ற நிலையை அடைவதற்கு 600 முதல் 700 மீட்டர் தொலைவு வரைக்கும் செல்ல வேண்டியி ருக்கும். இதுவே பயணிகள் ரயில் என்றால் அந்தத் தொலைவு 350 முதல் 400 மீட்டர்கள் வரை இருக்கலாம்.