states

ஒரு நாள் கூலியும் ஒரு கிலோ தக்காளியும்

பொது விநியோகத் துறையில் ரேசன்  கடைகள் மூலமாக வழங்க வேண்டிய உணவுப் பொருட்களுக்கு நிதி ஒதுக் கீட்டை ஒன்றிய மோடி அரசாங்கம் பெருமளவு குறைத்துள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வருகிறது. விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு  நாள் கூலி ரூ.150 கிடைக்கிறது. ஒரு கிலோ தக்காளி யின் விலை விவசாயத் தொழிலாளர்களின் ஒரு  நாள் தினக்கூலிக்கு விற்கப்படுகிறது. விலைவாசி உயர்வின் கொடூரத்தை கட்டுப்படுத்த மோடி அர சாங்கம் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சாரம் அதிகமாக நுகரப்படும் காலை மாலை  நேரங்களில் 200 சதவீதம் மின்கட்டணத்தை அதி கரிக்க ஒன்றிய மின்சாரத்துறை அறிவித்திருப்பது ஏழை எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும். விலைவாசி உயர்வு ஏழை எளிய மக்களை  தினமும் வதைக்கிறது.

100 நாள் வேலைத்திட்டத் திற்கு 30 சதமானம் நிதியை ஒதுக்கிய மோடி அரசு,  வேலையும் கூலியும் கொடுக்காமல் மோசடி  செய்து வருகிறது. மோடி அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள நிதியில் 40 நாட்களுக்கு கூட நாடு முழு வதும் வேலை கொடுக்க முடியாது. பல மாநிலங்க ளில் வேலை நடைபெறுவது என்பது வாய்மொழி  மூலமாக ஒன்றிய அரசால் தடுக்கப்பட்டு வருகிறது. வேலையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வேறு பாடின்றி நிரந்தரத்தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் வேலையை விட்டு துரத் தப்படுகிறார்கள். வேலையை இழக்கும் தொழி லாளர்களின் குடும்பங்களைப் பற்றி ஒன்றிய அரசு கவலைப்படவில்லை. கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு வரிச்சலுகை கொடுப்பது, அவர் களுக்கான தொழிலை மேம்படுத்துவதற்கு ஒப்  பந்தங்கள் செய்வது என்பதை மட்டுமே இந்திய  பிரதமர் தொடர்ந்து செய்து வருகிறார்.  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியாக திரண்டு,மக்கள் விரோத மோடி அரசை வீழ்த்துவதற்கான தயா ரிப்புப்பணியில் ஈடுபட்டிருப்பது வரவேற்கத் தகுந்  தது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை நாச மாக்கும் பாஜக மோடி அரசாங்கத்தை வீழ்த்து வதற்கு நாடு முழுவதும் கிராமப்புற மக்களை திரட்டுகிற பணியை முன்னெடுப்போம்.

- ஏ.விஜயராகவன் 
அகில இந்திய தலைவர், விவசாயத் தொழிலாளர் சங்கம்
தெலுங்கானாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதிலிருந்து