states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆன்லைன் ரம்மி சீட்டு விளையாட்டினை உதா ரணமாக காட்டி 6-ஆம்  வகுப்பு 3-ஆம் பருவத்துக் கான கணித பாடப்புத்த கத்தில் “முழுக்கள்” என்கிற தலைப்பில் பாடம் உள்ளது. ஆன் லைன் ரம்மியை தடை செய்ய தமிழ்நாடு அரசு  முயற்சித்து வரும் நிலையில், பாடப்புத்த கத்தில் சீட்டு விளை யாட்டினை  உதாரணமாக வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலை யில் சீட்டுகட்டு தொடர் பான பகுதி கணித பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித் துள்ளது.

இந்தியாவிலேயே முதன் முறையாக கடற்கரைக்கு மிக அருகில் அமையும் மெட்ரோ ரயில் நிலை யம் என்ற பெருமையை பெறுகிறது சென்னை “மெரினா மெட்ரோ ரயில் நிலையம்”. கலங்கரை விளக்கம் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர் கால நிலைமைகளை சமாளிக்க அதிநவீன தானியங்கி கதவுகள் அமைக்கப்பட உள்ளன. 

தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை ஆறு” என மாற்றம் செய் யக்கோரி தூத்துக்குடி யைச் சேர்ந்த காந்திமதி நாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். “வற்றாத ஜீவநதியான தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். இதன் தமிழ் பெயர் பொருநை நதியாகும்” என மனு தாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டுள்ள நிலை யில், மனுதொடர்பாக 12 வாரங்களில் உரிய முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர் களின் ஆதார் எண் விப ரங்களை எக்காரணம் கொண்டும் கேட்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு உணவுத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள  அனைத்து கோவில்களி லும் செல்போன் பயன் படுத்த தடைவிதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை க்கு உயர்நீதிமன்ற மது ரைக் கிளை உத்தர விட்டுள்ளது.

மதுரை மாவட்டம் முடு வார்பட்டியில் ஓடையில் குளிக்கச் சென்ற 3-ஆம் வகுப்பு பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் விக்டர் என்ப வர் நீளமான “காது முடி” கொண்ட மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார். விக்ட ருக்கு காதில் 18.1 செமீ  நீளத்திற்கு முடி உள்ளது.

உலகச் செய்திகள்

கொலம்பியாவில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட படுகொலைகளுக்கு அரசு சார்பாகத் தான் மன்னிப்புக் கோருவதாக அந்நாட்டின் ஜனாதிபதி குஸ்தவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி அல்வரோ யூரிப், ஆன்டியோகுயா மாகாணத்தின் ஆளுநராக இருந்தபோது தற்காப்புப் படைகள் என்ற பெயரில் இயங்கிய அமைப்பு இந்தப் படுகொலைகளைச் செய்தது. ‘‘கொல்லப்பட்டவர்கள் யாருக்கும் பகைவர்கள் இல்லை என்பதை அரசு அங்கீகரிக்கிறது. அவர்கள் மிகச் சாதாரண மக்களாவர்’’ என்று அவர் குறிப்பிட்டார்.

வரும் குளிர்காலத்தில் போதிய மின்சாரம் இல்லாமல் போகும் வாய்ப்புள்ளதால் பிரான்ஸ் மக்கள் மின்வெட்டை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஜனவரி மாதத்தில் பல நாட்கள் மின்வெட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிரமங்கள் இருக்கும் என்றாலும், மின்வெட்டு தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு மக்கள் போக வேண்டியதில்லை என்று அரசு அதிகாரி சேவியர் பைசாசிக் தெரிவித்துள்ளார். இருப்பினும், நிலைமை சரியாக வாய்ப்பில்லை என்று வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள்.

பொட்டாசியம் குளோரைடு மற்றும் லித்தியம் கார்போனேட் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலம் நவம்பர் மாதத்தில் ஏராளமான அந்நிய செலாவணியை ஈட்டியிருப்பதாக பொலிவியாவின் ஜனாதிபதி லூயிஸ் அர்ஸ் தெரிவித்திருக்கிறார். இது குறித்து சமூக வலைதளங்களில் அவர் இட்ட பதிவில், ‘‘இந்தத் துறையை எங்கள் நாட்டின் பொருளாதாரத்தின் தூண்களில் ஒன்றாக மாற்றப் போகிறோம். 2021 ஆம் ஆண்டில் கிடைத்த வருமானத்தை விட பலமடங்கு வருமானத்தை தற்போது ஈட்டி இருக்கிறாம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

;