states

img

கலைஞர் நூலகத்தின் 100 நாள்

மதுரை, அக்.22- கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து 100 நாட்கள் நிறைவடைந்தது.  மதுரை புதுநத்தம் சாலையில் கடந்த ஜூலை 15- ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினால் 215 கோடி ரூபாய் மதிப் பீட்டில் கலைஞர் நூற்றா ண்டு நூலகம் திறந்து வைக்க ப்பட்டது. ஏழு தளங்களுடன் 3.5 லட்சத்துக்கு அதிகமாக புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன.  இந்த நிலையில் கலை ஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து (ஞாயிறு) 100 நாட்கள் நிறைவடைந்தது. 100 நாட்களில் 2,41,314 வாச கர்களும், மாணவர்களும், பொதுமக்களும் நூல கத்திற்கு வருகை தந்துள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.