சிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலம் ரவங்கலா பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் தெற்கு சிக்கிமின் ரவங்கலா பகுதியிலிருந்து 12 கி.மீ தொலைவில் 5 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.