states

img

மிக ரக விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்து - விமானியை தேடும் பணி தீவிரம்

அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான மிக 29 கே பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த விமானியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மிக் 29 கே என்பது பயிற்சி விமானமாகும். இந்த விமானத்தில் கமாண்டர் நிஷாந்த் சிங் உள்பட இரு விமானிகள் கோவாவுக்கு பயணம் செய்துள்ளனர். இந்த விமானம் கடந்த 26 ஆம் தேதி அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு விமானி மீட்கப்பட்டார். நிஷாந்த் சிங்கை காணவில்லை. விமானத்தை தேடும் பணியில் இந்திய கடற்படை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக 9 போர்க் கப்பல்கள், 14 விமானங்கள், நீரில் மூழ்கி செல்லும் கப்பல்களை கொண்டு தேடும் பணிகள் நடைபெறுகின்றன. அதுபோல் அருகில் உள்ள மீனவ கிராமங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விமானியை தேடும் பணியில் கடலோர காவல் படையும் இணைந்துள்ளது.

இந்த நிலையில் விமானத்தின் உடைந்த உதிரிபாகங்கள் 29 ல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. லேண்டிங் கியர், டர்போ சேஞ்சர், எரிபொருள் டேங்க் என்ஜின், கவுலிங் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து விமானியை தேடும் பணியை கடற்படை தீவிரப்படுத்தியுள்ளது.
 

;