states

img

விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு ரூ.2000 கோடி

கடன் வழங்க ஹட்கோ நிறுவனம் ஒப்புதல்

திருவனந்தபுரம், மே 28- விழிஞ்ஞம் துறைமுக திட்டத்திற்கு ரூ.2000 கோடி கடன் ஹட்கோ நிறு வனத்தால் வழங்கப்பட்டுள்ளது. ரூ.3,400 கோடி கடனாக பெற ஹட்கோவை விழிஞ்ஞம் துறைமுக நிர்வாகம் அணுகியது. மாநில அரசும் விழிஞ்ஞம் இண்டர்நேஷனல் சீபோர்ட் லிமிடெட் (விசில்) நிறுவனமும் பெரிய தொகை யை கடனாக திரட்ட முடிந்ததை சாத னையாக பார்க்கிறது. விசிலுக்கு கடன் வழங்கப்பட்டது, மிகப்பெரிய திட்டத்தின் வெற்றியை நிதி நிறு வனங்களும் ஏற்றுக்கொண்டதன் விளைவாகும். இந்த தொகைக்கு 15  ஆண்டுகள் வட்டி மட்டுமே செலுத்தப் படும். ரூ.7,700 கோடி மதிப்பிலான துறைமுகத் திட்டத்துக்கு மாநில அரசு 4,428 கோடி ரூபாய் செலவு செய்கிறது. கடன் கிடைத்ததை தொடர்ந்து, பாலராமபுரம்-விழிஞ்ஞம் இடையே சுரங்க ரயில்பாதை அமைக்கும் பணி யும் விரைவில் தொடங்கும். இந்த  திட்டத்திற்கு தென்னக ரயில்வே ஏற் கனவே ஒப்புதல் அளித்திருந்தது.

10.7 கி.மீ தூரத்தை துறைமுகத்தில் இருந்து துவக்கி மூன்று ஆண்டுகளுக் குள் முடிக்க வேண்டும். கட்டுமான செலவு ரூ.1,060 கோடி. கொங்கன் ரயில் நிறுவனம் கட்டுமானப் பொறு ப்பை ஏற்றுள்ளது. அகலப்பாதை  சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே. 4.74 கிமீ சாலை சுரங்கப்பாதை வழி யாக செல்கிறது. இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கப்பல்களில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்கும் கிரேன்கள் செப்டம் பரில் விழிஞ்சம் வரத் தொடங்கும். 90  மீட்டர் உயரமுள்ள எட்டு கிரேன்கள் உட்பட 40 கிரேன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு உட்பட்ட கப்பல்கள்தான் முதலில்  தளத்தை வந்தடையும். முதற்கட்ட மாக, 2,960 மீட்டர் நீளமுள்ள மின்கம்பங்கள் அமைக்கும் பணி முடிக்கப்பட உள்ளது. இதில் 2,300 மீட்டர்கள் அமைக்கப்பட்டுவிட்டன. தளத்தின் கட்டுமானப் பணிகள் செப்டம்பரில் நிறைவடையும். ரூ.1635 கோடியை அதானி குழு மத்திற்கு இடைவெளி குறைப்பு (கேப் வைபிலிட்டி) நிதியாக செலுத்த வேண்டும். இதில் ஒன்றிய அரசு ரூ.817 கோடியும், மாநில அரசு ரூ.818 கோடி யும் செலுத்த வேண்டும். ஒன்றிய அரசின் பங்கைப் பெற அதானி துறை முக நிறுவனம் சம்பந்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தம் இருக்க வேண்டும். அதற்கான பணியை துறை முக துறை துவக்கியுள்ளது. கப்பல் நிறு வனங்கள் மற்றும் தளவாட நிறு வனங்கள் பங்கேற்கும் மாநாட்டை மாநில அரசு செப்டம்பர் மாதம் நடத்தவுள்ளது.