states

கடலோர மேலாண்மை சட்டம்: கேரளத்தில் 66 பஞ்சாயத்துகளுக்கு விலக்கு

திருவனந்தபுரம், 23-      கடலோர மேலாண்மைச் சட்டத்தில்  ஒன்றிய அரசு அளித்துள்ள விதிவிலக்கு களின் ஒரு பகுதியாக கேரளம் தயாரித்துள்ள வரைவில் 66 பஞ்சாயத்துகளுக்கு விலக்கு அளிக்கப்படும். பஞ்சாயத்துகள் இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 2,161க்கு மேல் மக்கள் தொகை கொண்ட பஞ்சாயத்துகள் 3ஏ என்றும் அதற்கும் குறைவானவை 3பி என்றும் வகைப்படுத்தப்படும்.

3ஏ பிரிவு பஞ்சாயத்துகளில் வளர்ச்சி இல்லாத மண்டலம் 200 மீட்டரில் இருந்து 50 மீட்டராக குறைக்கப்படும். 3பி பிரிவில் இது  200 மீட்டராக இருக்கும். சிஆர்இஎஸ் சட்டத்தின் வரம்பிலிருந்து போகலிபாடம் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள் முற்றிலும் விலக்கப்படும் வகையில் கேரளம் வரைவைத் தயாரித்துள்ளது. பொது மக்களிடம் இருந்து 33 ஆயிரம்  கருத்துகள் மற்றும் புகார்களைக் கேட்டறிந்த பிறகு, வரைவு சென்னை தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.