அகமதாபாத்தில், நீதிபதி மீது காலணி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விசாரணையின்போது கூடுதல் முதன்மை நீதிபதி எம்.பி.புரோஹித் மீது காலணி வீசப்பட்டது. 28 ஆண்டு பழமையான அடிதடி வழக்கு ஒன்றில், குற்றவாளிகள் 4 பேரை விடுதலை செய்து நேற்று தீர்ப்பளித்த நீதிபதி எம்.பி.புரோஹித் மீது ஆத்திரமடைந்த மனுதாரர் இன்று இந்த தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் நீதிபதிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்கு குஜராத் நீதித்துறை சேவை சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீசி தாக்க முயன்ற சம்பவம் நடந்து சில நாட்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
