states

img

நீட் ஊழலின் மையம் குஜராத்

அகமதாபாத், ஜூன் 30- நாட்டையே உலுக்கியுள்ள நீட் ஊழலின் மையமாக குஜராத் மாநிலம் உள்ளதாக சிபிஐ  விசாரணை மூலம் அம்பலமாகி யுள்ள நிலையில், பாஜகவிற்கு நெருக்கமான ஜெய் ஜலாராம் பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வினாத்தாள் விற்பனை, ஆள்மாறாட்டம், கருணை மதிப் பெண்கள் மூலம் நடப்பாண்டு நீட்  தேர்வில் மிகப்பெரும் முறைகேடு உள்ளிட்ட ஊழல் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலை யில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் தலை மையில் மாணவர்கள் நாடு முழு வதும் போராட்டம் நடத்தி வரு கின்றனர். நாடாளுமன்றத்திலும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் நீட்  முறைகேடு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி வலுவான போராட்ட த்தை முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநி லங்களில் மட்டுமின்றி, வடஇந்திய மாநிலங்களிலும் நீட் ஊழலை எதிர்த்து ஆவேசமிக்க போராட் டங்கள் எழுந்துள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள நிர்ப்பந்தம் காரண மாக மோடி அரசு நீட் தேர்வு முறை கேடு வழக்கை சிபிஐக்கு மாற்றி யது.

சிபிஐ விசாரணை

நீட் தேர்வு முறைகேடு தொடர் பான சிபிஐ விசாரணையில், பாஜக ஆளும் மாநிலங்களிலேயே முறைகேடு சம்பவங்கள் பெரிய அளவிற்கு அரங்கேறியுள்ளது அம்பலமாகியுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடியின் சொந்த மாநில மான குஜராத், நீட் ஊழலின் மைய மாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீட் முறைகேடு தொடர் பாக குஜராத் மாநிலத்தின் பஞ்ச் மஹால் மாவட்டத்திற்குட்பட்ட கோத்ராவில் ஏற்கெனவே பலர்  கைது செய்யப்பட்ட நிலையில், சனியன்று கோத்ரா உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த விசாரணை முடிவில் கோத்ராவின் ஜெய் ஜலாராம் பள்ளி, நீட் முறைகேட்டின் மைய மாக இருப்பது சிபிஐ விசாரணை யில் தெரியவந்துள்ளது. ஜெய் ஜலாராம் பள்ளியின் முதல்வர் தீட்சித் படேல், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொரு மாண வரிடமும் ரூ.10 லட்சம் வசூல் வேட்டை நடத்தியுள்ளார். பணம்  இந்த விசாரணை முடிவில் கோத்ராவின் ஜெய் ஜலாராம் பள்ளி, நீட் முறைகேட்டின் மைய மாக இருப்பது சிபிஐ விசாரணை யில் தெரியவந்துள்ளது. ஜெய் ஜலாராம் பள்ளியின் முதல்வர் தீட்சித் படேல், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொரு மாண வரிடமும் ரூ.10 லட்சம் வசூல் வேட்டை நடத்தியுள்ளார். பணம்  அளித்த மாணவர்களின் பெற்றோர் அளித்த வாக்கு மூலங்களின் அடிப்படை யில் தீட்சித் படேல் ரூ.2.5 கோடி வரை  வாரிச் சுருட்டியுள்ளது சிபிஐ விசாரணை யில் அம்பல மாகியுள்ளது. இதனைய டுத்து சனியன்று நள்ளிரவு தீட்சித் படேல்  மற்றும் ஜெய் ஜலாராம் பள்ளியின் ஆசி ரியர்கள், ஊழியர்கள் என 5 பேர் கைது  செய்யப்பட்டு, சிபிஐ காவலில் வைக்கப்  பட்டுள்ளனர். அவர்களிடம் ஞாயிறன்றும் தொடர் விசாரணை நடைபெற்றது.

பாஜக அமைச்சர்களுக்கு நெருக்கமான பள்ளி

“நீட் முறைகேட்டின் மையமாக கூறப்  படும் குஜராத்தின் ஜெய் ஜலராம் கல்வி  அறக்கட்டளை ஒன்றிய பாஜக அமைச்சர் களுக்கு நெருக்கமான நிறுவனம்” என குஜராத் காங்கிரஸ் தலைவரும் எம்.பி. யுமான சக்தி சிங் கோஹில் குற்றம் சாட்டி யுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”குஜராத்தின் ஜெய் ஜலா ராம் கல்வி அறக்கட்டளை நடத்தும் பள்ளி தான் நீட் முறைகேட்டின் மையம். முன் னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி,  ஆளுநர் ஆனந்திபென் படேல் (தற்போது  உத்தரப்பிரதேசம்) உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த முக்கிய நபர்களுக்கு இந்த அறக்  கட்டளைத் தலைவர் மிகவும் நெருக்கமான வராக உள்ளார். கடந்த காலங்களில் பல  விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப் பட்ட இந்த பள்ளிக்கு, நீட் தேர்வு மையம்  எப்படி ஒதுக்கப்பட்டது? என குஜராத் அரசு  விளக்கம் அளிக்க வேண்டும்” எனவும் கூறினார். 

நீட் ஊழல் குற்றவாளிகளுக்கு துணைபோன பாஜக அரசு

பஞ்ச்மஹால் மாவட்டத்தின் புறநகர் பகுதியான கோத்ராவில் உள்ள ஜெய் ஜலாராம் பள்ளியில் நீட் முறைகேடு அரங்கேறியுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார். ஆனால் குஜராத் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு ஜெய் ஜலாராம் பள்ளி  மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுமார்  40 நாட்களுக்கு பிறகு பஞ்ச்மஹால் மாவட்ட ஆட்சியரின் குற்றச்சாட்டு ஆதா ரத்தின் அடிப்படையிலேயே சிபிஐ அதி காரிகள் “ஜெய் ஜலாராம் பள்ளி தான் நீட்  முறைகேட்டின் மையம்” என்று கூறியுள்ள னர். இதன் மூலம் நீட் ஊழல் குற்றவாளி களுக்கு குஜராத் பாஜக அரசு துணை போனதும் அம்பலமாகியுள்ளது.

;