states

img

கர்நாடகா: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

கர்நாடகாவில்  தனியார் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கர்நாடக மாநிலம் ஹோலல்கேரே காவல்நிலைய பகுதியில் தனியார் பேருந்து மீது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து  ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.