அம்பேத்கரை இழிவுபடுத்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கர்நாடக சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு முன்பு கர்நாடக சட்டமன்றத்தில் முதல்வர் சித்தராமையா உத்தரவின் பேரில் 224 இருக்கைகளிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் கர்நாடக சட்டமன்றம் முழுவதும் அம்பேத்கர் கம்பீரமாக ஜொலித்தார். தங்கள் இருக்கையில் அம்பேத்கர் புகைப்படம் இருப்பதை கண்டவுடன் பாஜக, ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தை விட்டு ஓட்டம் பிடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.