கர்நாடகாவில் ஊழல் குற்றச்சாட்டில் ஏடிஜிபி அம்ரித் பாலை சிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஏடிஜிபி அம்ரித் பாலுக்கு எதிராக ஆதாரம் சிக்கியது. இதையடுத்து சிஐடி காவல்துறையினர் ஏடிஜிபி அம்ரித்பாலை திங்களன்று கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஞானேந்திரா கூறுகையில், “எஸ்.ஐ. நியமன முறைகேட்டில் ஏடிஜிபி அம்ரித் பாலுக்கு எதிராக ஆவணங்கள் சிக்கியுள்ளன. முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் தப்ப முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.