states

img

சர்தாம் யாத்திரை பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு

உத்தரகாண்டில் சர்தாம் யாத்திரை தொடங்கியதில் இருந்து தற்போது வரை 39 பேர் பலி யாகி உள்ளனர்
சர் தாம் யாத்திரை மேற்கொண்டு வரும் பக்தர்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மாரடைப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் 39 பக்தர்களும் யாத்திரையின்போது உயிரிழந்தனர். உடல்நலம் குன்றியவர்கள் சர் தாம் யாத்திரை மேற்கொள்ள முன்வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  
இதுகுறித்து உத்தரகண்ட் பொது சுகாதார இயக்குனர் மருத்துவர் ஷைலஜா பட் கூறுகையில், 
சார்தாம் யாத்திரை தொடங்கியதிலிருந்து, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மலை ஏற்றத்தினால் ஏற்படும் பயம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 39 பேர் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். 
ரிஷிகேஷ் ஐஎஸ்பிடி பதிவு தளத்தில் பயணிகளின் சுகாதார பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. யமனோத்ரி மற்றும் கங்கோத்ரி யாத்திரை பாதையில் முறையே டோபாடா, ஹினா மற்றும் பத்ரிநாத் கோயில் யாத்ரீகர்களுக்காக பாண்டுகேஷ்வரில் சுகாதார பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதார பரிசோதனைக்குப் பின், உடல் நலக்குறைவு கண்டறியப்பட்ட பயணிகள், ஓய்வெடுக்கவோ அல்லது உடல் நலம் தேறிய பின்னரே பயணம் மேற்கொள்ளவோ ​​அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

;