states

img

உத்தரகண்ட் பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்! - வலுக்கும் கண்டனம்

உத்தரகண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் பகவத் கீதையில் உள்ள வாசகங்களை கட்டாயம் வாசிக்க வேண்டும் என்ற அம்மாநில பாஜக அரசின் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பகவத் கீதையில் உள்ள வாசகங்களை கட்டாயம் வாசிக்க வேண்டும் என்றும், சமஸ்கிருத மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் பகவத் கீதை வாசகங்களை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும், பள்ளியின் அறிவிப்பு பலகையில் வாரத்திற்கு ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளில் அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் நிலையில், இத்தகைய நடவடிக்கை பொருத்தமற்றது; அரசியலமைப்பின் மதச்சார்பற்ற உணர்வுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.