காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி
வரலாற்றுச் சிறப்புமிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA) புல்டோசர் மூலம் இடிப்பது போல தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு பேரழிவு விளைவுகள் ஏற்படும்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
சர்வதேச அளவில் கர்நாடக வீரர்- வீராங்கனைகள் பதக்கங்களை வேட்டையாட வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும். அதே போல வெள்ளி வென்றால் ரூ.4 கோடி ; வெண்கலத்திற்கு ரூ.3 கோடி வழங்கப்படும்.
ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் அனுராக் தண்டா
பிரதமரின் பயணங்கள், பொதுக்கூட்டங்களுக்காக மக்கள் வரிப்பணம் பெருமளவில் செலவிடப்படுகிறது. குஜராத்தின் டெடியாபாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பந்தல் அமைப்பதற்கே 10 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அதே போல பிரதமர் மோடிக்கான விஐபி வசதிகளைச் செய்வதற்கும், அது தொடர்பான நிகழ்ச்சிகளுக்காகவும் 50 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
மற்ற மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு திருத்த நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், தேர்தல் நடக்கவிருக்கும் அசாமில் மட்டும் அது ஏன் நடக்கவில்லை? இதில் ஏதோ பெரும் மர்மம் உள்ளது.
