335 பயணிகளுடன் நூலிழையில் தப்பிய ஏர் இந்தியா விமானம்
திங்களன்று காலை 6.30 மணியள வில், தில்லியில் இருந்து மகா ராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு சுமார் 335 பயணிகளுடன் ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 777 (ஏஐ887) விமானம் கிளம்பியது. வானில் பறந்து கொண்டிருந்த போதே, வலது பக்க என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரண மாக வானில் சுமார் ஒரு மணிநேரம் வட்டமடித்த பின்பு அவசர அவசரமாக தில்லியிலேயே மீண்டும் பத்திரமாக தரையிறங்கியது. இதுதொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பாதுகாப்பு விதி முறைகளின்படி, விமானத்தை இயக்கிய குழுவினர் மீண்டும் தில்லி க்குத் திரும்ப முடிவு செய்தனர். விமா னம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது; பயணிகளும் ஊழியர்களும் விமா னத்தில் இருந்து பத்திரமாக வெளியேற் றப்பட்டனர். எதிர்பாராத இந்தச் சூழலால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்” என அதில் கூறப்பட்டுள்ளது. விமானிகளின் சாதுர்யம் முந்தைய பராமரிப்புப் பதிவுகளில் ஆயில் பயன்பாட்டில் எந்தப் பிரச்சனை யும் இல்லை என்று அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். ஆனால் விமானம் புறப்பட்ட பிறகு சிறகுகளைச் சீரமைக்கும் (Flap retraction) பணியின் போது, வலது பக்க இன்ஜினில் என்ஜின் ஆயில் அழுத்தம் (Oil pressure) குறைவாக இருப்பதை விமானிகள் கவனித்தனர். சிறிது நேரத்தில் என்ஜினின் ஆயில் அழுத்தம் சுழியமாக (Zero) குறைந்தது. இதனால் ஒரு மணிநேர கடும் போ ராட்டத்துக்கு இடையே விமானம் தில்லி யில் தரையிறங்கியுள்ளது. விமானிக ளின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
