“அரசியல் சாசனத்தை மாற்றினாலும், மாற்றாவிட்டாலும் இந்தியா இந்து தேசமாம்”
பதிவு செய்யப்படாத அமைப்பான ஆர்எஸ்எஸ், 100ஆவது ஆண்டை நாடு முழுவதும் வெறுப்புப் பேச்சுக் களுடன் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடை பெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்,”இந்தியா ஒரு இந்து நாடு. இந்து தேசம் என்று நாடாளு மன்றத்தில் அரசியல் சாசனத்தை மாற்றி னாலும், மாற்றாவிட்டாலும், அதை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். ஏனெனில், நாங்கள் இந்துக்கள். எங்களது தேசம் இந்து தேசம். பிறப்பை அடிப்படையாக கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவா வின் முத்திரை அல்ல. நாங்கள் முஸ்லிம் களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து உள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக நடப்ப தை நீங்கள் பார்த்தால், உங்கள் பார்வை அப்படியே இருக்கட்டும். அப்படி அதுபோன்ற செயல்கள் நடக்கவில்லை என்றால் உங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளுங்கள்” என மதவன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவேன் ஜிதன் ராம் மஞ்சி எச்சரிக்கை
பீகார் மாநிலத்தில் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்த லில் இருந்த, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான “இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா” கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பி னர் பதவி வழங்குவதாக உறுதியளிக் கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி 15 தொகுதிகள் கேட்ட நிலை யில், வெறும் 6 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இதில் 5 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில், அடுத்தாண்டு நடை பெற உள்ள மாநிலங்களவைத் தேர்த லில் எங்கள் கட்சிக்கு கண்டிப்பாக மாநி லங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். இல்லையென்றால் ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என ஜிதன் ராம் மஞ்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”மாநிலங்களவை பதவி கிடைக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறி தனிப் பாதையில் செல்ல வும் தயங்கமாட்டேன். தேர்தல் ஆணை யத்தின் அங்கீகாரத்தைப் பெறும் வகை யில், வருங்காலத் தேர்தல்களை எதிர் கொள்ளத் தயாராக கட்சியினர் இருக்க வேண்டும். தனித்துப் போட்டியிட்டு 100 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த கட்சித் தயாராக இருக்கிறது” என அவர் கூறினார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைத் தடுத்தால் கடும் நடவடிக்கை கேரள அரசு எச்சரிக்கை
கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டும் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூ ரிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. ஆனால் ஆர்எஸ் எஸ் - பாஜக சங் பரிவாரங்கள் பள்ளிக ளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டா டக் கூடாது என மிரட்டி வருவதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.இது கேரள அரசின் கவனத்திற்கு சென்ற நிலையில், கிறிஸ்துமஸ் கொண் டாட்டங்களைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கேரள கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி மேலும் கூறு கையில்,“மாநிலத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் வளாகத்தில் கிறிஸ்து மஸ் கொண்டாட்டங்களை ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் தடுத்ததாக செய்திகள் வெளி யாகியுள்ளன. கேரள அரசாங்கம் வட இந்தியாவில் காணப்படுவது போல் மதம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் பிளவுபடுத்தும் மாதிரிகளை பொறுத்துக் கொள்ளாது. மதச்சார்பற்ற கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற கேரளா போன்ற ஒரு மாநி லத்தில் இதுபோன்ற செயல்கள் கேள்விப் படாதவை” என அவர் கூறியுள்ளார்.