states

img

உ.பி.,யில் பேருந்து - கார் மோதல்

உ.பி.,யில் பேருந்து - கார் மோதல்
 

உத்தரப்பிரதேச மாநிலம் அலகா பாத்தில் (பிரயாக்ராஜ்) 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் கும்பமேளா நிகழ்வு நடை பெற்று வருகிறது. இந்நிலையில், கும்பமேளா நிகழ்வுக் காக சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் குழு அலகாபாத் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தது. அலகாபாத்-மிர்சா பூர் நெடுஞ்சாலையில் உள்ள மேஜா பகுதி அருகே சனிக்கிழமை அன்று அதிகாலை 2:30 மணியளவில் பக்தர்கள் சென்ற காரும் - எதிர்திசையில் வந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் காரில் பய ணித்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் மற்றும் பேருந் தில் பயணித்த 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் மேஜா பகுதி யில் உள்ள சுற்றுவட்டார மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.