தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம்
உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
புதுதில்லி, பிப். 18 - ஒன்றிய பாஜக அர சானது புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை, நள்ளிரவில் அவசர அவசர மாக நியமித்தது கண்ட னங்களுக்கு உள்ளாகியிருக் கிறது. தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கியது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 48 மணி நேரத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்ப்பையும் மீறி, இந்த நிய மனத்தை மோடி அரசு செய்திருந்தது, சந்தேகங் களை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம், புதன்கிழமையன்று விசார ணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. இது 41-ஆவது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதனை முன்கூட்டியே விசார ணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வலியுறுத்தியுள்ளார்.