இளமைப் பருவத்திலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் குதித்த பி.ராமமூர்த்தி (பி.ஆர்), காங்கிரசில் தொடங்கி, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி வழியாக 1934ல் கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைந்தார். தோழர் பி.ஜீவானந்தத்துடன் இணைந்து, சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.
சிறையிலிருந்தே சட்டமன்றத்திற்கு
சிறையில் இருந்தபோதே மதுரை வடக்கு தொகுதி யிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டார். இது அவரும் கம்யூனிஸ்ட் கட்சியும் மக்களி டம் பெற்றிருந்த ஆழமான செல்வாக்கை காட்டுகிறது. 1952 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்த அவர், தமிழக அரசியலில் புதிய அத்தி யாயத்தை தொடங்கினார்.
தொழிலாளர், விவசாயிகளின் குரல்
சட்டமன்றத்தில் அவரது உரைகள் எப்போதும் உழைக்கும் மக்களின் குரலாக ஒலித்தன: “பெட்ரோல் வரியை உயர்த்த அவசர சட்டம் கொண்டு வர முடியும். ஆனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றுவதை தடுக்க அவசர சட்டம் கொண்டு வர முடியாதா?” என்று கேள்வி எழுப்பினார்.
மொழி உரிமைக்கான போராளி
1967ல் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை, மொழி உரிமைக்கான போராட்டத்தில் ஒரு மைல்கல்: “ஜனநாயகம் செழிக்க வேண்டுமானால், ஒவ்வொரு ஆணும் பெண்ணும் குழந்தையும் மாநில நிர்வாகத்தில், சட்டமன்றத்தில், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் பங்கேற்க வேண்டும். இதற்கு மொழிவாரி மாநிலங்கள் மட்டுமே வழி.”
எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பு பணி
1952-57 காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பல முக்கிய பிரச்னைகளை எழுப்பினார்:
- நிலச் சீர்திருத்தங்கள்
- குத்தகைதாரர்கள் மற்றும் பண்ணை தொழிலாளர் உரிமைகள்
- தலித் மக்கள் மேம்பாடு
- தொழிற்சாலை தொழிலாளர் நலன்
- விலைவாசி உயர்வு
மதச்சார்பின்மையின் காவலர்
ராஜாஜி “கடவுள்” என்ற பெயரில் சட்டமன்றத் தில் பேசியபோது, பி.ஆர் அவரை சாடினார்: “அரசியலமைப்பின்படி உறுதிமொழி அல்லது சத்தியப்பிரமாணம் செய்யலாம். மதச்சார்பற்ற நாட்டில் கடவுள் நம்பிக்கை அல்லது நம்பிக்கை யின்மை ஒரு பிரச்சனையே அல்ல.”
முன்மாதிரித் தலைவர்
பி.ராமமூர்த்தி விட்டுச் சென்ற பாரம்பரியம்:
H உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தளரா போராட்டம்
H மொழி உரிமைக்கான தெளிவான குரல்
H மதச்சார்பின்மைக்கான உறுதியான நிலைப்பாடு
H சட்டமன்ற விவாதங்களில் தர்க்க ரீதியான அணுகுமுறை
H கொள்கையில் விட்டுக்கொடுக்காத உறுதி
காலம் கடந்தும் பொருந்தும் குரல்
70 ஆண்டுகள் கடந்தும் பி.ஆர் எழுப்பிய கேள்விகள் இன்றும் பொருத்தமானவை:
H விவசாயிகளின் நில உரிமை
H தொழிலாளர்களின் வாழ்வுரிமை
H மொழி உரிமை
H மாநில சுயாட்சி
H மதச்சார்பின்மை
இன்றைய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்களின் விவாதத் திறனையும், மக்கள் நல அக்கறையையும் கற்றுக் கொள்ள வேண்டும்.