states

img

மும்பையில் மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க அகில இந்திய மாநாடு

இந்தியாவின் மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க கூட்டமைப்பின் (FMRAI - எப்எம்ஆர்ஏஐ) 27ஆவது  தேசிய மாநாடு பிப்ரவரி 13 முதல் 15 வரை 3 நாட்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் குர்லா (கிழக்கு) பாந்த்ரா பவனில் நடை பெற்றது.  எப்எம்ஆர்ஏஐ தலைவர் ரமேஷ் சுந்தர் சங்கத்தின் கொடி ஏற்றத்துடன் மாநாட்டின் துவக்க விழா தொடங்கியது. தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மறைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.

ஏஐஓசிடி தலைவர் ஜெகன்நாத் அப்பாஜி ஷிண்டே வரவேற்புரையாற்றி,”மருத்துவ பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற் றும் மருந்தகங்கள் இணைந்து மருந்து மற்றும் மருத்துவத் துறை யின் தற்போதைய சவால்களை சமாளிக்க கூட்டு உழைப்பு தேவை. ரசாயன மற்றும் மருந்தகங்கள் சங்கத்தின் இத்தகைய முயற்சி களுக்கு எப்போதும் ஆதரவு வழங்கும்” என உறுதியளித்தார்.

புகழ்பெற்ற இரையகக் குடலி யவியல் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) மருத்துவ நெறி முறை குழுவின் உறுப்பினர் டாக்டர் சஞ்சய் நாகராஜ் மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் கூறு கையில், “மருத்துவ மற்றும் மருத்  துவ சேவைகளின் தனியார்மயமாக்  கல் மற்றும் கடந்த இரண்டு தசாப்  தங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் பொதுமக்கள் மீது கடும் தாக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது. இதுகவலை அளிப்பதாக உள்ளது. மருத்துவத் துறையில் கார்ப்பரேட் செல்வாக்கு அதிகரிப்பதால், மருத்துவ சேவை கள் விலை உயர்ந்து வருகிறது.  மருந்து விலைகளை கட்டுப்படுத்து வதற்கும், பொதுமக்களின் மருத்  துவ சேவைகளை முன்னுரிமை யாக்குவதற்கும் அரசாங்கத்தின் தலையீடு தேவை” என அவர் வலி யுறுத்தினார்.

உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்

தொடர்ந்து உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், அகில இந்திய  விவசாயயிகள் சங்க தலைவரு மான டாக்டர்.அசோக் தாவ்லே, “தொழிலாளர் வர்க்கம் புதிய 4 தொழிலாளர் சட்டங்களுக்கு எதி ராக தீவிர போராட்டத்தை நடத்த  வேண்டும். விவசாய சட்டங்க ளுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திலிருந்து ஈர்க்கப் பட்டு, தொழிலாளர் சங்கங்களுக்கு அகில இந்திய விவசாயயிகள் சங்கம் முழு ஆதரவை வழங்  கும். விவசாயிகளின் போராட்டத்  தின் போது எப்எம்ஆர்ஏஐ அளித்த  ஆதரவு பாராட்டுக்குரியது. அதற்  காக நன்றி தெரிவித்துக்கொள்கி றேன். அடுத்த மாநாட்டிற்கு முன் தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

 சிஐடியு அகில இந்திய பொதுச்  செயலாளர் தபன் சென், எப்எம்ஆர்ஏஐ பொதுச்செயலாளர் சந்தானு சட்டர்ஜி, மகாராஷ்டிரா மாநில சிஐடியு பொதுச் செயலா ளர் எம்.எச்.ஷேக், ஏஐடியுசி தேசிய செயலாளர் சுகுமார் தாம்லே, மகாராஷ்டிரா தொழிற்  சங்கங்களின் கூட்டுக் குழுவின்  ஒருங்கிணைப்பாளர் விவேக்  மொன்டேரியோ வாழ்த்துரை யாற்றினர்.

தலைவராக கிருஷ்ணானந்த்

மாநாடு நிறைவு நாளில்  எப்எம்ஆர்ஏஐ-வின் புதிய  அகில இந்திய ஒருங்குகிணைப் புக் குழு தேர்வு செயப்பட்டது.  அகில இந்திய தலைவராக கிருஷ்ணானந்த் தேர்வு செய் யப்பட்டார். பொதுச்செயலாளராக பார்தா ரக்சித்தும், பொருளாளராக கவுசிக் ராய் சவுத்ரியும் தேர்வு  செய்யப்பட்டனர். தொடர்ந்து  எம்எஸ்எம்ஆர்ஏ பொதுச்செயலா ளர் ஸ்ரீகாந்த் போபாஸ் நிறைவுரை யாற்றினர்.