states

img

நாசவேலை இல்லை ; விமானிகள் மீது தவறும் இல்லை தொழில்நுட்பக் கோளாறே “ஏர் இந்தியா” விமான விபத்துக்கு காரணம்

நாசவேலை இல்லை ; விமானிகள் மீது தவறும் இல்லை தொழில்நுட்பக் கோளாறே “ஏர் இந்தியா” விமான விபத்துக்கு காரணம்

ஏஏஐபியின் முதற்கட்ட விசாரணையில் பரபரப்புத் தகவல்

ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலி ருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன் புறப்பட்ட “ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் இரட்டை இன்ஜின்” விமானம் விபத்தில் சிக்கியது. இதில் விமா னத்தில் பயணம் செய்த 241 பேர் (மொத்தம் 242 பேர்) உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். விமானம் விழுந்த இடத்தில் மேலும் 34 பேர் உயிரிழந்தனர். அதாவது இந்த விமான விபத்தில்  மொத்தம் 275 பேர் உயி ரிழந்தனர்.  விபத்து குறித்து விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) விசாரணை நடத்தி வருகிறது. ஏஏஐபி-இன் இயக்குநர் ஜெனரல் தலைமையில் இந்திய விமானப் படை,  இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச் ஏஎல்), அமெரிக்க தேசிய போக்குவரத்து பாது காப்பு வாரியம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த விசாரணையின் முதற்கட்ட அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில், “விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 2 இன்ஜின்கள் உள்ளன. இரண்டு இன்ஜின்களுக்கும்  எரிபொ ருள் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் பொத்தான்கள்  (சுவிட்ச்) உள்ளன. அந்த பொத்தான்கள் “ரன்” என்ற நிலையில் இருந்தால், எரிபொருள் சென்று  கொண்டிருக்கும். “கட் ஆப்” நிலையில் இருந்தால் இன்ஜினுக்கு எரிபொருள் செல் லாது. இதுதான் இன்ஜினுக்கும், எரிபொருள் ஓட்டத்திற்கு இடையே உள்ள சமன்பாடு ஆகும். இத்தகைய சூழலில், விமானம் புறப்படத் தொடங்கிய உடன் திடீரென ஒரு நொடிக்குள் “ரன்” என்ற நிலையில் இருந்து “கட் ஆப்” என்ற நிலைக்கு பொத்தான்கள் மாறி உள்ளன. அப்போது ஒரு விமானி ஏன் துண்டித்தீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு மற்றொரு விமானி, நான் துண்டிக்கவில்லை என பதில் அளிக்கி றார். இந்த உரையாடல் “காக்பிட் (cockpit)” குரல் பதிவில் பதிவாகி இருக்கிறது. பொத் தான்கள் “கட்ஆப்” நிலைக்கு மாறியதும், இன்ஜி னுக்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது.  உடனடியாக ரன் நிலைக்கு சுவிட்ச் நகர்த்தப் பட்டதை கருப்புப் பெட்டியில் பதிவான தரவுகள்  தெரிவிக்கின்றன. அப்போது, முதல் இன்ஜின்  செயல்படுவதற்கான அறிகுறி தென்பட்டுள் ளது. எனினும், இரண்டாவது இன்ஜின் செயல் படவில்லை. முதல் இன்ஜின் செயல்படுவ தற்கான அறிகுறி தென்படத் தொடங்கியதும் விமானம் மீண்டும் மேலே செல்வதற்கான முயற்சி இருந்தது. எனினும், இரண்டாவது இன்ஜின் “ஷட் டவுன்” ஆகியதால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. விமானம் மொத்தம் 32 வினாடிகள் மட்டுமே காற்றில் பறந்தது. சரியாக பிற்பகல் 1.39 மணிக்கு விபத்து நிகழ்ந்துள் ளது. விமானம் 0.9 கடல் மைல் மட்டுமே பயணித்துள்ளது. நாசவேலை இல்லை விமான விபத்துக்கு நாசவேலை காரணமாக இருப்பதற்கான உடனடி ஆதாரங்கள் ஏதும் இல்லை. மேலும், வானிலை பிரச்சனைகள் எது வும் காரணமாக இருக்கவில்லை. வானம் தெளி வாக இருந்தது. காற்று மிகவும் வலுவாக இல்லை. விமானிகள் ஆரோக்கியமான வர்களாகவே இருந்துள்ளனர். போதிய ஓய்வை எடுத்துள்ளனர். மேலும், இந்த வகை விமா னத்தை இயக்குவதில் விமானிகளுக்கு போதிய அனுபவம் உள்ளது” என அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக “ஏர் இந்தியா” விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிகிறது. 

கடைசி 2:22 மணிநேரத்தில் என்ன நடந்தது?

H ஜூன் 12 அன்று காலை 11:17 மணிக்கு தில்லியிலிருந்து ஏர் இந்தியா விமானம் அகம தாபாத் வந்துள்ளது. பயணிகளை இறக்கிவிட்டு, ஏற வேண்டிய பயணிகளுடன் விமானம் புறப்படத் தயாரானது. H 1:25 மணிக்கு வழித்தடத்தில் பயணிப்பதற்கான அனுமதி விமானத்திலிருந்து வந்தி ருக்கிறது. அதற்கு விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுமதி வந்துள்ளது. H 1:32 மணிக்கு விமானம், தரைக் கட்டுப்பாட்டிலிருந்து டவர் கட்டுப்பாட்டுக்கு மாற்றப் பட்டது. H 1:37:33 மணிக்கு விமானம் புறப்பட அனுமதி வழங்கப்படுகிறது. H 1:37:37 மணிக்கு விமானம் புறப்படுகிறது. H 1:38:39 மணிக்கு விமானம் தரையிலிருந்து மேல் எழுகிறது. விமானத்தின் தரை சென்சார், வான் சென்சார் நிலைக்கு மாறுகிறது. H 1.38.42 மணிக்கு விமானம் 180 கிலோ மீட்டர் தொலைவு என்ற வேகத்தை அடைகிறது. பிறகு, இரண்டு இன்ஜின்களுக்கும் அடுத்தடுத்து எரிபொருள் செல்வதற்கான பொத்தான்கள் இரண்டும் 1 வினாடிக்குள் கட்-ஆப் என்ற நிலைக்கு மாற்றப்படுகிறது. இன்ஜின்களுக்கு எரி பொருள் வருவது தடைபட்டதும், அதனால் மேலெழும்ப முடியவில்லை. H 1:39 மணிக்கு அப்படியே கீழே விழுந்து நொறுங்கி வெடித்து சிதறியது.

இதற்கு பாஜகவினர் என்ன சொல்லப் போகிறார்கள்?  

விமான விபத்து நிகழ்ந்தவுடன் நாச வேலை தான் காரணம் ; விமா னிகளால் தான் விபத்து ; துருக்கி நாட்டின் சதியாக இருக்கலாம் ; வானிலை பிரச்சனையாக இருக்கலாம் என பாஜக தலைவர்கள் மற்றும் ஒன்றிய அமைச் சர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். ஆனால் பாஜகவிற்கு அதிக நன்கொடை வழங்கும் ஏர் இந்தியாவைப் பற்றியோ மற்றும் விமானத்தின் தொழில் நுட்பக்கோளாறு பற்றி ஒரு வார்த்தை கூட பாஜகவினர் பேசவில்லை. இத்தகைய சூழலில் விமான விபத்துக்கு நாசவேலை காரணம் இல்லை ; விமானிகள் மீதும் தவறும் இல்லை, தொழில்நுட்பக் கோளாறே “ஏர் இந்தியா” விமான விபத்துக்கு காரணம் என ஏஏஐபி முதற் கட்ட விசாரணையில் கூறியுள்ளது. இதற்கு பாஜகவினர் என்ன சொல்லப் போகி றார்கள்?

ஒன்றிய அரசுக்கு இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக, இந்திய விமானிகள் சங்கம் வெள்ளிக் கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில்,“விமானிகள்தான் குற்றவாளிகள் என்பதாக ஊகித்து விசாரணை ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே செல்கிறது. இந்த முக்கியமான விசாரணைக்கு தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. விசாரணை வெளிப் படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளது. ராம் மோகன் நாயுடு மழுப்பல் “விசாரணை அறிக்கையில் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகள் மட்டுமே உள்ளன. இவ்விஷ யத்தில் அவசரப்பட்டு நாம் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. விசாரணைக் குழு  பாராட்டுக்குரிய வகையில் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களைப் பொறுத்தவரை, உலகின் சிறந்த விமானிகளும் விமானப் பணி யாளர்களும் எங்களிடம் இருப்பதாக நான் உண்மையாகவே நம்புகிறேன்” என ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு மழுப்பலாக கூறியுள்ளார்.