tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஏதுவாக, ஒன்றிய அரசின் திட்டங் களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது அந்தந்த நிதியாண்டுக்குள்ளேயே விடுவித்திட வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

ஆட்டோக்களுக்கு அரசு செயலி

சென்னை: தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 15-க்கும்  மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, ஆட்டோக்களுக்கான செயலியை உருவாக்க அரசு  சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக  நீதித்துறை, சட்டத்துறை ஆலோசனை பெற்று முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை  குறித்து முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. எனவே, அதனை செயல்படுத்தும் வகையில் இந்த ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

பெஞ்சால் புயல்: நிவாரணம் ஒதுக்கீடு

சென்னை: பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட  விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.498.8 கோடி  ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிவாரணம்  வழங்குவதன் மூலம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறுவர். மானாவாரி பயிர் ஹெக்டேருக்கு ரூ.8,500, நெற்பயிர், பாசன  வசதி பெற்ற பயிர்களுக்கு ரூ.17,000 நிவாரணம் வழங்க வும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு

இராமநாதபுரம்: தங்கச்சிமடம் மீன் இறங்குதளத்தை மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்தவும், குந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மேலும், பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய பணிகளுக்காக ரூ.360  கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.  

இணைய மோசடி 2.5 மடங்கு அதிகரிப்பு

சென்னை: சைபர் குற்றங்கள் அல்லது இணையவழி பண மோசடிகள், குறிப்பாக டிஜிட்டல் கைது எனும் டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் ஆன்-லைன் செயலி மோசடிகள் தமிழ்நாட்டில்  அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து காவல்துறை சார்பில்  தொடர்ந்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வந்தாலும், இணையவழி மோசடிகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதன்படி, இணையவழி மோசடிகள் எண்ணிக்கை தமிழகத்தில் 2023-இல் 4,121 ஆகவும், 2024-இல் 5,385 ஆகவும் உயர்ந்துள்ளது.

‘பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி’

சென்னை: தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி பயனாளிகளுக்கு உதவித்தொகைகளை வழங்கினார். அப்போது அவர், “இந்தியாவில் இருக்கும் பிற மாநிலங்களை விட, தமிழக அரசின் சிறைத்துறை ஒரு முன்மாதிரி துறையாக  திகழ்கிறது. சிறைவாசிகளின் சீர்திருத்தத்திலும், மறுவாழ்வுக் கான முன்னெடுப்புகளிலும், சிறைவாசிகளின் நலனிலும் கூடுதல் அக்கறையுடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது” என்றார்.

வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடை பெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாலியல்  குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளது