பிரயாக்ராஜ்,பிப்.18- கும்பமேளா நடைபெறும் நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெறும் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில் 'Faecal Coliform' என்ற பாக்டீரியா அதிகளவில் இருப்பதால், குளிப்பதற்குத் தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை.
இது பொதுவாக மனிதர்கள், விலங்குகளின் மலக்குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாவாகும். இந்த பாக்டீரியாவால் மோசமான தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கும்பமேளாவில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியாவின் பிரபலங்கள் பலரும் நீராடியது குறிப்பிடத்தக்கது.