உத்தரப்பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெளியே இன்று ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையான தயால் மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்கிக்கொண்டிருந்தபோது வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவ்வழியாகச் சென்ற டிராக்டர் ஓட்டுநரும், சிலிண்டர்களை இறக்கிக் கொண்டிருந்த நபரும் உயிரிழந்தனர். சிலிண்டர் வெடித்ததில் மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள வீடுகளில் கண்ணாடிகள் உடைந்து சிதறின.