மேற்கு வங்கம், தில்லியில் அமலாக்கத்துறை சோதனை
மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் அறி விப்பு வெளியாக உள்ளது. இத்தகைய சூழலில், மணல் மற்றும் நிலக்கரி கடத்தல் தொடர்பான முறைகேடு வழக்கு களில், அமலாக் கத்துறை செவ்வா யன்று மேற்கு வங்கம், தில்லியின் பல்வேறு இடங்க ளில் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியது. மத்திய பாதுகாப்புப் படையி னருடன் இணைந்த அமலாக்கத்துறை குழுக்கள், காலை 6:30 மணி முதல் தில்லி, கொல்கத்தா, அசன்சால், துர்காபூர் மற்றும் மேற்கு பர்துவான் மாவட்டத் தின் பிற பகுதிகளில் உள்ள சோதனை களை மேற்கொண்டது. குறிப்பாக அசன்சாலில் புதிதாக நியமிக்கப்பட்ட புத்புத் காவல் நிலைய பொறுப்பு அதி காரி மனோரஞ்சன் மண்டல் என்பவரது இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சோத னையின் போது முக்கியப் பணப் பரி மாற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அம லாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி யுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன.
