states

img

தெலுங்கானாவில் சீத்தாராம் யெச்சூரிக்கு நினைவேந்தல் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ரவீந்திர பாரதி ஆடிட்டோரியத்தில் சனியன்று நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பி.வி.ராகவலு, மத்தியக் குழு உறுப்பினரும், தெலுங்கானா மாநில செயலாளருமான தம்மினேனி வீரபத்ரம், பிஆர்எஸ் மூத்த தலைவர் கே.டி.ராமாராவ், சிபிஐ தெலுங்கானா மாநில செயலாளர் கே. சாம்பசிவராவ் எம்எல்ஏ, எம்எல்சி கோதண்டராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.