திருவனந்தபுரம் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பாயும் சாலியாறு பகுதியில் உள்ள மலைச்சரிவில் கடந்த ஜூலை 30 அன்று நிலச்சரிவு ஏற் பட்டது. இந்த கொடூரமான நிலச்சரி வில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட 5 கிராமங்கள் உருக்கு லைந்த நிலையில், 336 பேர் உயிரிழந்தனர். 76 பேர் காணாமல் போயுள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்தன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையிலான இடது ஜன நாயக முன்னணி அரசு துரிதமாக மீட்புப்பணியில் ஈடுபட்டு, பாதிக் கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண நிதி வழங்கி நிலச்சரிவால் உருக்குலைந்த சாலி யாறு சாரல் பகுதியை 50 நாட்களுக் குள் இயல்புநிலைக்கு கொண்டு வந்தது. ஆனால் பாஜக தலைமை யிலான ஒன்றிய மோடி அரசு வய நாடு நிலச்சரிவு ஏற்பட்டு 50 நாட் களை நெருங்கியுள்ள பொழுதி லும், இன்னும் ஓரு ரூபாய் கூட நிவாரண மற்றும் இழப்பீடு தொ கையை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
இதனை மறைக்க கேரள பாஜக தலைவர்களில் ஒருவரான அனூப் ஆண்டனி ஜோசப்,”இறுதிச் சடங்கி ற்கு ரூ.75,000 செலவிடப் பட்டுள்ளது. தன்னார்வலர்களின் உணவுக்காக ரூ.12 கோடி செல விடப்பட்டுள்ளது. இதில் பிரம்மா ண்ட ஊழல் அரங்கேறியது” என ஆதாரமற்ற மற்றும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பொய் யான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். மேலும் இதனை முன்வைத்து பாஜக ஆதரவு பெற்ற “கோடி மீடியா” ஊடகங் கள் கேரள அரசிற்கு எதிராக ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை தலைப்புச் செய்தியாக வெளியிட்டு வரு கிறது. பாஜகவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கண்டித்து, மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில், “வயநாடு நிலச்சரிவில் நிவாரணப் பணிகள் குறித்து பொய்யான தகவல்க ளைப் பரப்பி மாநில அரசை ஊட கங்கள் இழிவுபடுத்த முயற்சிக் கிறது” என “கோடி மீடியா” ஊடகங் கள் மீது கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள அரசை அவமதிப்பதே நோக்கம்...
இதுகுறித்து திருவனந்த புரத்தில் நடைபெற்ற செய்தியா ளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,”கேரளாவில் தற்போது அழிவுகரமான இதழி யல் நடந்து கொண்டிருக்கிறது. ஊட கங்களில் சில பகுதி (பாஜக ஆதரவு “கோடி மீடியா” ஊடகங்கள்) சர்ச்சைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறி யுள்ளன. ஊடகங்களில் இத்தகைய போலியான தகவல்கள் பரப்பப் பட்டதைத் தொடர்ந்து, கேரள அரசு நியாயமற்ற முறையில் உதவிக ளைப் பறிக்க முயற்சிப்பதாக ஒரு பொய்யான கதை உருவாகி விட்டது. ஊடகங்களில் வெளியா கும் தவறான செய்தி, ஊடக நெறி முறையின் குறைபாடு அல்ல.
அதே போல போலிச் செய்திக ளின் உண்மையான பிரச்சனை பொய்கள் அல்ல ; அவற்றின் பின்ன ணியில் ஒரு நிகழ்ச்சி நிரல் உள்ளது. இந்த நிகழ்ச்சி நிரல் மாநிலத்தி ற்கும், கேரள மக்களுக்கும் எதிரா னது. எதிர்க்கட்சிகளும் ஊடகங்க ளின் போலிச் செய்திகளை அறிக்கைகளாக கையில் எடுத்துக் கொண்டு விமர்சித்து வருகின்றன. இந்த கதைகளுக்கு பின்னால் இருக்கும் ஒரே நோக்கம் கேரள அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்து வது மட்டுமே. இத்தகைய போலிச் செய்திகளால் கேரள மக்களும், அரசாங்கமும் உலக அளவில் அவமதிப்புக்கு ஆளாகியுள்ளது.
பேரிடர்கள் ஏற்படும் போது அதுகுறித்த குறிப்பாணைகளை அமைச்சர்கள் தயாரிப்பது இல்லை. மாறாக அந்தத் துறை களில் அதிக நிபுணத்துவத்தை நிரூ பித்த நிபுணர்களே அதனைத் தயா ரிக்கின்றனர். அந்த நிபுணர்கள் தயாரித்த தகவல்களை ஊட கங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டன. குறிப்பாணைகளில் உள்ள தரவுகள் மிகைப்படுத்தப்பட்டவை இல்லை. அவை, திட்டமிடப்பட்ட மதிப்பீடுகள்” என அவர் கூறினார்.