states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஜார்க்கண்டில் பாஜக பொய் மற்றும் நச்சு அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. பழங்குடி மக்களின் நிலங்களை வெளியிலிருந்து வந்தவர்கள் (முஸ்லிம்கள்) திருடுகின்றனர் என மோடி பேசுகிறார். பழங்குடி மக்களின் நிலங்களை வெளியிலிருந்து வந்தவர்கள் அல்ல; அதானியும்,அம்பானியும் பெரும் சுரங்க கார்ப்பரேட்டுகளும்தான் பழங்குடி மக்களின் அனுமதி இல்லாமலேயே அவர்களின் நிலங்களை பறிக்கின்றனர்.

வேலை கேட்டு போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது பாஜக ஆளும் உத்தரப்பிரதேச காவல்துறை தடியடி நடத்தியிருக்கிறது. ஆனால் ஜார்க்கண்ட் பிரச்சாரத்தில் மோடி, நிரந்தர வேலைவாய்ப்புக்கு வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு என்ன சொல்வது?

இந்த நாடு எப்பொழுதும் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தில் மட்டுமே இயங்கும். வேறு எந்த சட்டமும் நாட்டை இயக்க முடியாது என்பதை பாஜகவிற்கு மீண்டும் சொல்கிறேன்.

எங்கள் மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் வேலையின்மையைப் போக்கவும், விவசாயத்தை காக்கவும் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என சொல்லுங்கள் பாஜக தலைவர்களே?

பீகார் மாநிலத்தில் நடக்க உள்ள இடைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய பிரசாந்த் கிஷோரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தில்லியில் பட்டாசுக்கு நிரந்தர தடை விதிப்பது குறித்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் மதச்சார்பற்ற ஜனதாதள முன்னாள் எம்.பி., பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.