tamilnadu

img

சிபிஎம் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக ப.சு. பாரதி அண்ணா தேர்வு!

திருப்போரூர், நவ. 11 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செங்கல் பட்டு மாவட்டச் செயலாள ராக ப.சு. பாரதி அண்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட 24-வது மாநாடு திருப்போரூரில் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.  செல்வம் தலைமை வகித் தார். மாவட்டக்குழு உறுப்பி னர் ஜி. மோகன் செங்கொடி யை ஏற்றி வைத்தார்.  மாவட்ட செயற்குழு உறுப் பினர் வி. அரிகிருஷ்ணன் அஞ்சலி தீர்மானத்தை முன் மொழிந்தார். திருப்போரூர் பகுதிச் செயலாளர் எம். செல்வம் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் பா. ஜான்சி ராணி மாநாட்டைத் துவக்கி வைத்துப்பேசினார்.  மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா வேலை யறிக்கையையும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ. சங்கர் வரவு - செலவு அறிக்கையையும் சமர்ப்பித் தனர். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் மாநாட்டை வாழ்த்திப் பேசி னார். கட்சியின் மூத்த தலை வர் அ. சவுந்தரராசன், மாநி லக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயினார் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பகத்சிங் தாஸ் நன்றி கூறினார்.  புதிய மாவட்டக்குழு தேர்வு  இந்த மாநாட்டில் 31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக ப.சு.பாரதி அண்ணா தேர்ந் தெடுக்கப்பட்டார். இ. சங்கர், வி. அரிகிருஷ்ணன், க.சேஷாத்திரி, க. புரு ஷோத்தமன், க. பகத்சிங் தாஸ், எஸ். ராஜா, எம்.  செல்வம், எம். கலைச் செல்வி ஆகியோர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள்  பன்னாட்டுத் தொழிற் சாலைகளில் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்; எச்பிஎல் ஒருங்கி ணைந்த தடுப்பூசி நிறுவனத் திற்கு நிதி ஒதுக்கி செயல் படுத்த வேண்டும்; நீண்ட நாட்களாக பயிர் செய்யும் நிலத்திற்கு நில பட்டாவும், வீட்டுமனை பட்டா இல்லா மல் வசிக்கும் அனைவருக் கும் பட்டா வழங்க வேண்டும் 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு இல்லாமல் வேலை அட்டை வைத்தி ருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்; நிறுத்தி வைக்கப்பட்டு ள்ள மாற்றுத் திறனாளி உத வித்தொகையை உடனடி யாக அரசு வழங்க வேண்டும். கல்பாக்கம் அணுசக்தி துறை யில் நிரந்தரத் தன்மை உள்ள தொடர்ச்சியான வேலைகளில் ஒப்பந்த முறையை   ரத்து செய்து, அரசு வேலை களில் ஒப்பந்தத் தொழி லாளர் மற்றும் சுற்றுப்புற இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்; காலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை ஒன்றிய அரசு உடனடியாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.