states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்

புதுதில்லி, நவ. 11 - வெளிநாட்டு மாணவர் கள் மிக விரைவாக கனடா பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான, மாணவர் விசா பெற கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்ட மாணவர் நேரடி சேர்க்கை (எஸ்டிஎஸ்) முறை யை கனடா அரசு தடாலடி யாக ரத்து செய்துள்ளது. இந்தியாவிலிருந்து சென்றிருக்கும் 90 சதவிகித மாணவர்களுக்கு அதிலும் பஞ்சாப் மாநிலத்திலிருந்து சென்ற மாணவர்களுக்கு இது மிகப்பெரிய சிக்கலாக மாறியிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்திலிருந்துதான், இந்த நேரடி சேர்க்கை முறை மூலம் ஏராளமான மாண வர்கள் கனடா சென்றுள்ள னர். இந்நிலையில், அவர் களது எதிர்காலம் தற்போது கேள்விக்குறி யாகி யிருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 3 லட்சம் மாணவர்கள் இந்த மாணவர் நேரடி சேர்க்கை திட்டம் மூலம் கனடா சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இனி அவ்வாறு செல்ல முடியாது என்பதுடன், கனடாவின் நிரந்தர விசா பெறுவதிலும் தடையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கார் வெடிப்பு வழக்கு :  என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை 

கோயம்புத்தூர், நவ.11-  கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்களிடம், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடம் பகுதியில் கார் வெடித்த சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இதுவரை 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரை காவலில் எடுத்தும் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கோவை உக்கடத்தைச் சேர்ந்த அபு அனீபா, பவாஸ் ரகுமான், சரண் உள்ளிட்ட 3 பேரை தேசிய புலனாய்வு முகமையினர்  கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன், கைது செய்யப்பட்ட 3 பேரையும் 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும் காவல் முடிந்து நவம்பர் 14-ந் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக அபு அனீபா,  பவாஸ் ரகுமான், சரண் ஆகியோரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.)  விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் கைதான 3 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்த நிலையில் தற்போது கோவையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

வானம் இடிந்து விழுந்து விடாது அதிமுக வழக்கை உடனடியாக  விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

சென்னை, நவ. 11 - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், சுனில் குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மனு குறித்து ஒன்றிய - மாநில அரசுகள் மற்றும் சுனில் குமார் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்திருந்தது. இதனிடையே இந்த வழக்கு திங்களன்று (நவ.11) பட்டியலிடப்படாத நிலையிலும், மனுதாரர் தரப்பில் நீதிபதி வி. சுப்பராயன் முன் முறையிடப்பட்டது. அப்போது, “பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டதா?” என்பது குறித்து கேட்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்ட நீதிபதி, வழக்கு பட்டியலிடுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என கூறினார். அப்போது, மனுதாரர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், “நியமிக்கப்பட்ட நபர் தகுதி இல்லாத நபராக இருந்தால் மட்டுமே தலையிட முடியும். இல்லையென்றால் அரசின் கொள்கை முடிவில் எவ்வாறு தலையிட முடியும்” எனக் கேள்வி எழுப்பினார்.  தொடர்ந்து, “இந்த வழக்கை உடனடியாக விசாரிக்கவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்து விடாது. அனைத்திற்கும் அரசியல் சாயம் பூச வேண்டாம்” எனவும் குறிப்பிட்டார்.

எம்.பி.பி.எஸ். மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு

சென்னை, நவ.11-  எம்.பி.பி.எஸ். மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற நவம்பர் 23 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  இந்தியாவிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை, தேசியமருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நடப்பாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம், இடஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்டவற்றை என்.எம்.சி. இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் கடந்த 8 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அது தற்போது, வரும் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. அதற்கான அவகாசம் ஏற்கெனவே ஒரு முறை நீட்டிக்கப்பட்டு அதுவும், கடந்த 8 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அந்த அவகாசம் வரும் 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு மக்களை அவமதித்த விவகாரம்  நடிகை கஸ்தூரி  முன்ஜாமீன் கேட்டு மனு

மதுரை, நவ. 11 - சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கு அருகே கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாகப் பேசியது கடும் கண்டனங்களுக்கு உள்ளானது.  இதுதொடர்பாக தெலுங்கு அமைப்பினர் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்ததோடு, காவல் நிலையங்களிலும் புகார்களை அளித்தனர். அதன்பேரில் கஸ்தூரி மீது 4 பிரிவு களின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் கஸ்தூரி திடீரென தலைமறைவானார்.  இதனிடையே, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த விவகாரத்தில், முன் ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். நடிகை கஸ்தூரியின் மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை (நவ.12) விசாரணைக்கு வரவுள்ளது.

போதைப் பொருள் வழக்கு துணை நடிகை தகவலின் பேரில் மேலும் 4 பேர் கைது

சென்னை, நவ.11-  போதைப் பொருள் வழக்கில், கைதான துணை நடிகை கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள பிர பல வணிக வளாகம் அருகே  துணை நடிகை எஸ்தர் என்கிற மீனா, 5 கிராம் ‘மெத்தம்பெட்ட மைன்’ போதைப் பொருளு டன் சனிக்கிழமை கைது  செய்யப்பட்டார். சென்னை  அண்ணாசாலை காவல்துறை யினர், அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இதனைத்தொடர்ந்து, துணை நடிகை எஸ்தருக்கு போதைப் பொருளை சப்ளை செய்த அவரது நண்பர் தாமஸ், ‘இண்டர்நெட்’ அழைப்பு மூலமாகவே பேசி இருப்பதால், காவல்துறையினரால் அவரை நெருங்க முடியவில்லை.  எனவே ‘சைபர் கிரைம்’ காவல்துறை உதவியுடன் அவரை கைது செய்யும் நட வடிக்கையில் தீவிரம் காட்டி  வருகின்றனர். இந்த சூழலில் விசாரணைக்கு பின்னர், துணை நடிகை எஸ்தர் 15  நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப் பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.  இந்நிலையில் துணை நடிகை எஸ்தர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை துரைப்பாக்கத்தில் ஐ.டி. ஊழியர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த நான்கு பேரை தனிப் படை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

20 கிலோ கடத்தல்  தங்கம் பறிமுதல்

சென்னை, நவ.11- சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கத்தை அதி காரிகள் பறிமுதல் செய்துள் ளனர்.  மீனம்பாக்கம் அண்ணா  பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடு களில் இருந்து வரும் விமா னங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவ தாக சுங்கத்துறை அதிகாரி களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து விமான நிலையத்தில் அவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்ட னர். இந்த சோதனையில் 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 3 விமானங்களில் கடத்தி வரப்பட்ட இந்த தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். மேலும்,  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தாக 8 பெண்கள் உள்பட 25 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

“பாஜகவுடன் ஒட்டோ, உறவோ இல்லை டி.ஜெயக்குமார் உறுதி!

சென்னை, நவ. 11 - சென்னையில் செய்தி யாளர்களை சந்தித்த அதி முக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், “பாஜக உடன் இப்போதும் கூட்டணி இல்லை, எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுகவின் முடிவில் 2026 மட்டுமல்ல, எப்போதும் மாற்றமில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கட்சி சார்பில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்று கூறியுள்ளார். “எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் திரித்து வெளியிடப்பட்டுள் ளன. ஒருமித்த கருத்துடன் வரும் கட்சிகளுடன் பேசி கூட்டணி அமைப்போம் என்றே எடப்பாடி பழனி சாமி கூறினார்” என்றும் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.