tamilnadu

img

நமது அரசு தான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த கடினமாக உழைப்போம் தமிழர்களிடம் பறிக்கப்பட்ட நிலம் அவர்களிடமே ஒப்படைக்கப்படும்!

கொழும்பு, நவ. 11 - இலங்கையில் தமிழ் மக்களி டம் இருந்து, கடந்த காலங்களில் பறிக்கப்பட்ட நிலங்களை தற் போதைய அரசு மீண்டும் அவர் களிடமே வழங்கும் என்று அந்நா ட்டின் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள் ளார். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களின் நிலங்களை இல ங்கையின் கடந்த கால ஆட்சியா ளர்கள் தொல்லியல் துறை, வனத்துறை மூலமாக  பலவந்த மாக கையகப்படுத்தியுள்ளனர். இந்த நிலங்களை மீட்பதற்காக கடந்த பல வருடங்களாக அப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் போராடி வருகின்றனர். தமிழர் பகுதியில் பேரணி இந்நிலையில், இலங்கையின் புதிய ஜனாதிபதியும், இடது சாரிக் கட்சியான ஜேவிபி-யின் தலைவருமான அனுர குமார திஸாநாயக்க தமிழர்கள் பெரும் பான்மையாக வசிக்கும் மாகாணங்களில் தமது முதல் பேரணியை நடத்தினார்.  அப்போது, பேரணியில் கூடி யிருந்தவர்கள் மத்தியில் பேசிய திஸாநாயக்க, “தற்போது நாடா ளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. அதே போல செயல் படாமல் உள்ள மாகாண மற்றும் உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தல்களும் விரைவில் நடத்தப் படும். தமிழர்கள் வாழும் பகுதி யில் அவர்கள் தேர்வுசெய்த பிர திநிதிகளே அவர்களது பிரதேசங் களை வழிநடத்தவும், ஆளவும் முடியும் என்பதை தற்போதைய தங்களின் ஆட்சி உறுதி செய்யும்” என்றார்.

‘இன, மத பேதமற்ற இலங்கை’

புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழர்களுக்கு கூடுத லான அதிகாரப் பகிர்வு மற்றும் இனப்பிரச்சனைக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான கோரிக் கை நிவர்த்தி செய்யப்படும் என்ற தமது தேர்தல் வாக்குறுதி பற்றி நேரடியாக எதுவும் குறிப் பிடாத திஸாநாயக்க, அதே நேரம், “இன, மத பேதமின்றி ஒவ் வொரு மனிதரும் சமம் என உணரும் வகையில் இலங்கை யை கட்டியெழுப்புவோம்” என்று உறுதியளித்தார். “ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களிடம் குறைவான வாக்கு கள் பெற்றதற்கு, அவர்கள் மத்தி யில் எமது திட்டத்தை முறையாக கொண்டுபோய் சேர்க்காததும்; எங்கள் கட்சி சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்குப் பகுதியில் செய்த அள விற்கு தெற்குப் பகுதியில் கடின மாக உழைக்காததும் காரணம்” என்று கூறிய அவர், சிங்களர் களையும் தமிழர்களையும் ஒரு வரையொருவர் எதிர் எதிராக நிறுத்தி வைத்திருந்த கடந்த கால ஆட்சியாளர்களையும் அர சியல்வாதிகளையும் கடுமை யாக விமர்சித்தார்.

இனியொரு போருக்கான தேவை எழாது

“30 வருட கால போருக்குப் பின், இலங்கையில் கண்ணீரும்; குழந்தைகள், கணவர்கள் என அன்புக்குரியவர்களை இழந்த தும் என அழிவைத் தவிர வேறொ ன்றும் மிஞ்சவில்லை” என்ற திஸா நாயக்க, “இதுபோன்ற மற் றொரு போரை உருவாக்க எந்த தேவையும் இல்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம். இலங்கையில் உள்ள பல்வேறு சமூக மக்களின் மத்தியில் நாங்கள் நம்பிக்கையை உரு வாக்குவோம். ‘இது தங்களுக் கான அரசாங்கம்’ என அவர்கள் உணரும் வரை கடினமாக உழைப் போம்” என்றும் உறுதியளித் தார். மேலும், “நமது நாட்டின் இனவெறி அரசியல் கலாச்சா ரத்தை மாற்றும் இந்த முயற்சி யில் நீங்கள் அனைவரும் என்னு டன் இணைந்து செயல்பட வேண் டும்” எனவும் யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். 

விவசாயிகள்- மீனவர்களுக்கு முக்கியத்துவம்

“விவசாயிகள் மற்றும் மீனவ  மக்களுக்கு எமது அரசு ஆதர வளிக்கும்” என்று கூறிய திஸா நாயக்க, இந்திய மீனவர்கள் பற்றி பேசிய போது, “இந்திய நாட்டின் விசைப்படகுகளை இலங்கை கடற்பகுதியில் சட்ட விரோதமாக மீன்பிடிக்க அனு மதிக்க மாட்டோம்; எனவும் இந்த நடைமுறையானது இலங்கை கடல் சுற்றுச்சூழல் அமைப்பை கடுமையாக பாதிப்பதுடன் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கி றது” எனவும் குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி, சில மாதங்களு க்கு முன்பு “யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரம் நடத்திய போது அங்கு பெருமளவில் மக்களின் கூட்டம் வரவில்லை. அந்த பிரச்சாரம் ஒரு உள்ள ரங்க கூட்டமாகத்தான் நடைபெற் றது. ஆனால், திஸாநாயக்க வின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு  தமிழர்கள் பகுதியில்  ஜனாதிபதி திஸாநாயக்கவுக்கு தற்போது மிகப்பெரும் அளவில் மக்கள் கூட்டமாக வந்து ஆதரவு தெரி வித்தனர். தமிழர் பகுதியில் ஆதரவு அதிகரிப்பு இந்த மாற்றம் ஜேவிபியின் வாக்குறுதிகளின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது; எனவும், ஜேவிபி கட்சிக்கு தமிழர்கள் பக்கம் இருந்து ஆதரவு காற்று வீசத் துவங்கியுள்ளது; என்றும் இல ங்கை அரசியல் பார்வையாளர் கள் கூறுகின்றனர். இந்த ஆத ரவு வரும் நாடாளுமன்றத் தேர்த லில் இடதுசாரிகளின் பலம் அதிகரிக்க உதவும் எனவும் அவர்கள் தெரிவிக்கிக்கின்றனர்.