81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க் கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்ட மாக (43 தொகுதிகள் - நவ., 13 மற்றும் 38 தொகுதிகள் - நவ., 13) சட்டமன்ற தேர்தல் நடைபெறு கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் திங்களன்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், ஜார்க்கண்ட்டில் “இந்தியா” கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என லோக் போல் நிறுவனம் கருத்துக்கணிப்பில் கூறியுள் ளது. பெரும்பான்மைக்கு 42 இடங்கள் தேவை என்ற சூழலில் ஆளும் “இந்தியா” கூட்டணி (ஜேஎம்எம் - காங்கி ரஸ் - ஆர்ஜேடி) 41 முதல் 44 இடங்களை கைப்பற்றும் என்றும், பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி 36 முதல் 39 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும், இதரக் கட்சிகள் 3 முதல் 4 இடங்களை கைப்பற்றும் என லோக் போல் கருத்துக் கணிப்பு முடிவு களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு கட்டத் தேர்தலுக்குப் பின்னர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.